தொப்புளை எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்வதால் 7 முக்கியமான நன்மைகள் ஏற்படும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். தொப்புளை சுத்தம் செய்யாவிட்டால் அதில் பாக்டீரியாக்கள், அழுக்கு, எண்ணெய் சேர்ந்து பலவிதமான தொந்தரவும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


நாம் எல்லோரும் அன்றாடம் குளிக்கிறோம். சிலர் இரண்டு வேளை கூட குளிக்கிறோம். ஆனால் எப்படிக் குளிக்கிறோம் என்பதுதான் முக்கியம். நாம் குளிக்கும் போது உடல் முழுவதும் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். நம் பிறப்புறுப்புகள், அக்குள், ஆசன வாய், முதுகு முழங்கால், பின்னங்கால், காது மடலின் பின்புறம் என அனைத்தையும் சுத்தமாக சோப்பு கொண்டு கழுவி குளிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நம் தொப்புள் சுத்தம் பற்றி பெரியவர்களுக்கே பெரும்பாலும் தெரியவில்லை.  


வாருங்கள் தொப்புள்ளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்று காண்போம்.


சோப், ஷவர் ஜெல் அல்லது மிதமான ஷாம்பூ:


உங்கள் தொப்புளை சுத்தப்படுத்த மிகவும் எளிய முறைகளில் ஒன்று சோப், ஷவர் ஜெல் அல்லது மிதமான ஷாம்பூ கொண்டு அதனை சுத்தப்படுத்துவது. குளித்த பின்னர் ஒரு மென்மையான துண்டு கொண்டு நன்றாக ஒத்தி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் தொப்புளுக்குள் தண்ணீர், சோப்பு ஏதும் மிச்சமிருந்தால் அது நீங்கிவிடும். தொப்புள் ஈரமில்லாமல் வறண்டுவிடும்.


உப்பு கொண்டு சுத்தம் செய்யலாம்:


தொப்புளில் அதிக அழுக்கு இருப்பதாக உணர்ந்தால் உப்பு கொண்டு சுத்தம் செய்யலாம். தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும். அதில் ஒரு சுத்தமான துணியை முக்கி பிழிந்து எடுக்கவும். பின்னர் அந்த துணியைக் கொண்டு தொப்புளின் உள் பகுதியை மென்மையாக சுத்தம் செய்யவும்.


இதேபோல் சுத்தமான நல்லெண்ணெய் கொண்டும் தொப்புளை சுத்தம் செய்யலாம்.


தொப்புளை சுத்தம் செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?


உங்கள் மனம் அமைதி பெறும்


எண்ணெய் தேய்த்து பின்னர் மிதமான சோப் கொண்டு தொப்புளை சுத்தம் செய்வதால் மனது இலகுவாகும். இதனால் உங்கள் உடல் சோர்வு நீங்குவதுடன் மனமும் அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெறும்.


சருமம் மின்னும்


தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதல் நலன் உடல் முழுவதும் பிரதிபலிக்கும். ஆம் உங்கள் உடலின் சருமம் முழுவதும் மின்னும். உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தொப்புளில் தேய்க்கும் எண்னெய் தந்து தோல் பொலிவு தரும்.


வலி நிவாரணி


தொப்புளில் தேய்க்கும் எண்ணெய் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும். அடி வயிற்றில் ஏற்படும் சூட்டு வலியும், மாதவிடாய் வலிக்கும் தொப்புளில் எண்ணெய் தேற்பது நலம் சேர்க்கும்.


கண்களுக்கு நன்மை தரும்


உங்கள் தொப்புளை சுத்தமாக வைத்திருப்பது எண்ணெய் தேய்த்து ஈரப்பதத்துடன் வைப்பது கண்களுக்கு நலன் பயக்கும். கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் இதன் மூலம் நீங்கும்.


உயிர் ஜனன உறுப்புகளை பேணும்


ஆண், பெண் என இருபாலருக்கும் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பது அவரவர் பிறப்புறுப்பு நலனையும் பேணும். குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் கர்ப்பப்பைக்கு வலு சேர்க்கும். 


எனவே இனி உடல் தூய்மை என்பது தொப்புள் தூய்மையும் சேர்த்துதான் என்று உணர்ந்து செயல்படுங்கள்.