பொதுவாக மக்கள் அனைவரும், வாழ்வில் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் உணர்வை  விரும்புகிறார்கள். இதைப் போலவே பயம் மற்றும் திகில் என்ற உணர்வு பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. உதாரணமாக ஒரு பேய்ப்படத்தை பார்ப்பதைப்போல.. இதனாலேயே க்ரைம் திரில்லர் படங்கள் மற்றும் பேய் படங்கள் என நிறைய அமானுஷ்யம் கலந்த படங்களை ஓடிடி மற்றும் திரைகளில் நம்மால் காண முடிகிறது.


இன்னும் சிலர் திகிலான பயணங்களை மேற்கொள்வதற்காகவும், பயத்தை அனுபவிப்பதற்காகவும், தனியாகவோ அல்லது ஒரு குழு உடனோ பயணங்களை   மேற்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு அடர்ந்த வனத்திற்குள் செல்வது, மிக உயரமான மலைப் பகுதிகளில் கயிறு கொண்டு ஏறி, அதிகம் மக்களில்லாத இடங்களுக்குச் செல்வது ஆகியவற்றைச் சொல்லலாம்.


இப்படி பய உணர்வை செயற்கையாக பெறவேண்டிய அவசியம் சில இடங்களில் இல்லை என சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக, இந்தியாவில் திகில் மற்றும் பயத்தை தருகின்ற சாலைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. டிமாண்டி காலணி ரேஞ்சுக்கு பயமுறுத்துறாங்கப்பா..



ஜான்சன் & ஜான்சன் சாலை மகாராஷ்டிரா:


மகாராஷ்டிரா மாநிலம் முலுண்டில் உள்ள, ஜான்சன் & ஜான்சன் சாலையானது,இந்தியாவில் இருக்கும் அமானுஷ்யம் நிறைந்த பயம் தரும் இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வெள்ளைப் புடவை அணிந்த ஒரு பெண், இந்தப் பகுதிகளில் அடிக்கடி தென்படுவதாகவும், இங்கு நிறைய விபத்துக்கள் நடப்பதாகவும், கூறப்படுகிறது. இது மோகினி என்றும் யட்சிணி என்று அப்பகுதி மக்கள் கதை சொல்கிறார்கள்..


சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலய வழித்தடம், தலமலை - தமிழ்நாடு:


சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் வழியாக நேஷனல் ஹைவேஸ் 209 என்ற ரோடு செல்கிறது. இந்த காட்டில் வீரப்பன், வசித்து வந்ததாக அறிந்திருந்தாலும், இந்த இடத்தில் அமானுஷ்யமான நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்த பக்கம் செல்லும் வாகன ஓட்டிகள் பல பேர், விநோத உருவங்களை பார்த்ததாக கதை சொல்கிறார்கள். 


கசரா காட், மும்பை நாசிக்- மும்பை:

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள கசரா காட் என்ற இடம், அமானுஷ்யத்திற்கு புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த நெடுஞ்சாலை முழுவதும் பேய்கள் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த இடம் மந்திரவாதிகளுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் வித்தியாசமாக உடைய அணிந்த  நிறைய மனிதர்களை கண்டதாக இந்த வழியாக செல்லும்  பயணிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 


இந்தப்பக்கமாக வாகனங்களில் இறைச்சி கொண்டுபோனால், அவை காணாமல் போவதாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன. வெறித்தனமான சிரிப்பொலி கேட்பதாக மக்கள் கதை சொல்வதையும் உங்களால் கேட்கமுடியும்.


ப்ளூ கிராஸ் ரோடு, சென்னை:


இந்த ரோட்டில்  அமானுஷ்ய விஷயங்கள் அடிக்கடி நடப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் பயமுறுத்தும் வகையிலான உருவங்கள் தென்படுவதாகவும் மக்களால் சொல்லப்படுகிறது. 


ஆகவே இந்தியாவில் உள்ள பல சாலைகள் இவ்வாறு அமானுஷ்யம் நிறைந்ததாக இருப்பதாகவும்,  பயணிகள் இதைக் கண்டு பயம் அடைந்ததாகவும், இது போன்ற பல கதைகள் உலா வந்த வண்ணமே இருக்கின்றன. எது எப்படியோ இந்த கதைகளெல்லாம் வெறும் கதைகளாகவேதான் உள்ளன. இதற்கெல்லாம் எந்த ஆதாரங்களும் இல்லை.