கோடைக்காலம் மற்ற காலங்களை போல கிடையாது. சருமம் மற்றும் கூந்தலை முறையாக பராமரிக்காவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முகத்தை பரமாரிக்க சிலர் அக்கறை காட்டுவார்கள் ஆனால் கூந்தலுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதனால் முடி உதிர்வு , வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.  கோடைக்காலத்தில் கூந்தலுக்கான ஸ்பாவை எடுத்துக்கொள்வது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். கீழ்க்கண்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்து மஜாய் செய்வதன் மூலம் உங்கள் தலைமுடியின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியைத் தொடங்குகிறது.


அவகேடோ:


ஜிம்மிற்குச் செல்பவர்களுக்கு இதன் அருமை நன்றாகவே தெரியும்.இதில்  அதிக ஈரப்பதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் வறட்சியை எதிர்த்துப் போராடவும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் , சூரியனிடமிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கும்.







வாழைப்பழம் :


எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ மற்றும் பொட்டாசியம் நிச்சயமாக உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்குவதோடு மிகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. இவை பொடுகை எதிர்த்துப் போராடவும், உங்கள் தலைமுடியின் அமைப்பை மேம்படுத்தவும், நீரேற்றத்தை அதிகரிக்கவும், நிறைய பளபளப்பைச் சேர்க்கவும் உதவும்.



தேங்காய் பால்:


லாரிக் அமிலம், புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இது உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. பொடுகுத் தொல்லையைக் குறைத்து, உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்கும். அதோடு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், நீங்கள் இதை குளித்த பிறகு ஹேர் கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.



வேம்பு:


இது நமது முன்னோர்கள் காலம் தொட்டே பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஒன்று. இது பொடுகு தொல்லைக்கு முக்கிய தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது. வேம்பு முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அதோடு இளநரையை தடுக்கிறது.







முட்டைகள்:


இதில் உள்ள மூலப்பொருட்கள் உங்கள் தலைமுடிக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது. உங்கள் தலைமுடிக்கு ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது, இதில் வைட்டமின்கள் மற்றும் பயோட்டின் உள்ளது, இவை இரண்டும் நன்கு ஊட்டமளிக்கிறது மற்றும் பளபளப்பான  கூந்தலை உங்களுக்கு பரிசளிக்கிறது. முட்டையில் வெள்ளை கருவை பயன்படுத்துங்கள்.