காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய சுவையான பட்டர் ஃப்ரூட் எனப்படும் வெண்ணெய் பழத்தினால் செய்யப்படும் உணவு வகைகள் ஏராளமுண்டு .


ஆரோக்கியமான, கிரீமியான, ருசியான, மற்றும் ஏராளமான விட்டமின்கள் நிறைந்த, வெண்ணெய் பழத்தை  ஜூஸ் ஆக, கட்டியான ஒரு பானமாக, அவகேடோ  துவையல் டோஸ்ட்டாக  பல வழிகளில் தயாரிக்கலாம்.


உலக அளவில் இந்த அவகோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட் பழத்தை மில்லியன் கணக்கான மக்கள் நாளாந்த உணவுகளில் சேர்த்துக் கொள்வதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த அவகோடா பழம் உடலுக்கு நல்ல பொலிவையும் மென்மையையும் ஒரு எண்ணெய் தன்மையையும் கொடுப்பதால் இதில் கிரீம்களும் தயார் செய்யப்படுகின்றன .அதேபோல் டயட் அதாவது உடம்பை குறைக்க  குறைப்பவர்களும் இந்த அவகோடா பழத்தை தமது உணவுகளில் மிக முக்கியமாக சேர்த்துகொள்கின்றனர்.


 வெண்ணெய் பழங்களை இனிப்பு வகைகளிலும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?


 பிரவுனிகள் முதல் வாழைப்பழ ரொட்டி வரை எல்லாவற்றிலும் வெறும் சுவையான ரெசிபிகள் பரிசோதனையில் மட்டுமே இருந்து விடாதீர்கள்.


எல்லாவற்றிற்கும் மேலாக, உணவுக்குப் பின் டெசர்ட் ஆக எடுத்துக் கொள்ளும், எளிமையாக அவகோடா மூலம் செய்யும் இனிப்பு உணவுகளை நாம் வீட்டில் செய்து பார்க்க முயற்சிக்கலாமே.


காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கான சுவையான பட்டர் ஃப்ரூட் மூலம் செய்யப்படும் உணவு முறை பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


 பொதுவாக காலை உணவில் அவகேடோ டொமட்டிலோ எனப்படும் பட்டர் ஃப்ரூட் தொக்கை நாம் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.


காலை உணவுக்கான டகோஸ் எனப்படும் ரோல் போன்று இந்த அவகோடா கலவையை நாம் செய்து சாப்பிடலாம் .எளிமையானதாக செய்யப்படும் அவகோடா ரோல் மிகவும் சுவையாக இருக்கும் என கூறப்படுகிறது, ​​​​நீங்கள் அவற்றை ஒவ்வொரு நாளும் விரும்புவீர்கள்!


 துருவல் முட்டை மற்றும் வெண்ணெய் பழம் கலவை ,மதிய உணவு வரை உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். மேலும் கூடுதலாக கீரை போன்றவற்றையும் இந்த ரோலில் சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இந்த உணவு இருக்கும் .


ஆரோக்கியமான 5 நிமிட அவகேடோ டோஸ்ட்


அவகேடோ டோஸ்ட் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இது வெறுமனே பச்சை கலரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஒரு உணவாக இருக்கிறது.!


 மனதுக்கு இதம் ஊட்டும் வகையில் மினி ஸ்நாக், கிரீமி வெண்ணெய் மற்றும் மேலே நன்றாக அவித்த அல்லது பொறித்த, சமைத்த முட்டையுடன் கூடிய மொறுமொறுப்பான டோஸ்ட் செய்து நாம் பரிமாறலாம்.


அவகோடோ பிரவுனிகள்


பிரவுனிகள் பொதுவாக எல்லோராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு உணவாகும். இதற்கு அடிமையானவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.


 அவகோடா, மேப்பிள் சிரப், பாதாம் மாவு மற்றும் தேங்காய் சர்க்கரையுடன் சுவையான, கலவையாகவும் கிட்டத்தட்ட சத்தான விருந்தாக இந்த அவகோடா பிரவுனி இருக்கிறது!


அவகாடோ சாக்லேட் மவுஸ்


இந்த  பட்டர் ஃப்ரூட் எனப்படும் வெண்ணெய் பழம் வெல்வெட் போன்ற மென்மையான, கிரீமியான, மிகவும் சுவையானது. 


அவகோடா சாக்லேட் மவுசை மிக எளிமையான முறையில் நாம் வீடுகளில் செய்யலாம்.
முட்டை, அவகோடா ஆகியவற்றை  நன்றாக கிரீமியாக கலக்க வேண்டும் சூடாக்கவோ அல்லது சாக்லேட்டில் மடிக்கவோ தேவையில்லை. அனைத்து பொருட்களையும் ஒன்றிணைத்து, கெட்டியாக குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் பரிமாறலாம்.


பட்டர் ஃப்ரூட் சாலட்


இந்த பட்டர் ஃப்ரூட் சாலடானது மிகவும் ஊட்டச்சத்து மிக்கதாகும். அதே போல் பட்டர் ஃப்ரூட் உடன் பல காய்கறிகளும் சேர்த்து செய்யப்படுவதால் இது உண்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் மிகவும் இனிமையாகவே இருக்கும்.


 அவகோடா, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை மற்றும் சிறிது மசாலா - போன்றன அதை ஒரு மிருதுவான, திருப்திகரமான சாலடாக மாற்றுகிறது, இது டயட் இருப்பவர்கள் இரவு உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்ததாகும்