குழந்தைகளுக்கு உணவை ஒரு மாதிரியாக சாப்பிடப் பிடிப்பதில்லை. அவர்கள் எப்போதும் விதவிதமாக வித்தியாசமாக சாப்பிடவே விரும்புகிறார்கள். அதுபோலத்தான் அவர்கள் அருந்த விரும்பும் பானங்களும் இருக்கும். சோடா நிறைந்த கார்பனேட்டட் பானங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கிறது. ஆனால் அதை சாப்பிடுவது அவ்வளவு நல்லது அல்ல. புரதம் நிறைந்த பானங்களே குழந்தைகளுக்கு உகந்தது. சோடாவில் 10 டீஸ்பூன் சர்க்கரை இருக்கிறது. அதாவது 150 கலோரி வேல்யூ கொண்ட சோடாவில் 30 முதல் 55 மில்லிகிராம் வரை கஃபைன் தான் இருக்கிறது. அதனால் இதனை உங்கள் குழந்தைகளுக்கு தராமல் இருப்பதே சிறந்தது.


தேங்காய் தண்ணீர்


தேங்காய் தண்ணீர் மிகவும் ஆரோக்கியமானது, அது உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியதும் கூட. இதில் இயற்கையான இனிப்பும், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இது சோடாவுக்கு சிறந்த மாற்றாகும். தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். ரிபோஃப்ளேவின், ஃபைடோஜெனிக் அமிலம், தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். தேங்காய் நீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.


காபி கொடுக்கலாம்


காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள். மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.


ஐஸ் டீ


 ஐஸ் டீக்களில் இயற்கையில் இருந்து கிடைக்கப் பெறும் மூலிகைகள் பயன்படுகின்றன. இவை உடலுக்கு குளிரூட்டும் தன்மையை தருகிறது. இந்திய சமையலில் காணப்படும் இந்த மூலிகையை நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பயன்படுத்தி வந்துள்ளார்கள். இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்கவும் உதவுகிறது. ஐஸ் டீயில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து கொடுக்கலாம்.


தேநீர்


தேநீரில் உள்ள Tannin-கள் வயிறு சார்ந்த பிரச்சனைகளை களைய அதிகம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Tannin குடல் அழற்சியை குறைக்க உதவுவது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேநீர் பெருமளவு உதவுவதாக சொல்லப்படுகிறது. சீமை சாமந்தி தேநீர், பெப்பர் மின்ட் தேநீர், க்ரீன் டீ போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
 
பழச்சாறுகளை பழக்கப்படுத்தலாம்
 
ஆரோக்கியமான, வலுவான உடல் பெறுவதற்கு எல்லா வயதினருக்கும் ஏற்றவை பழச்சாறுகள். பழச்சாறுகளால் உடலுக்குப் புத்துணர்வும் புதுத் தெம்பும் கிடைப்பதுடன் ஈரல், சிறுநீரகங்கள், தோல் போன்ற கழிவு உறுப்புகளின் திறன் அதிகரிக்கப்படுகிறது. உடற்கழிவுகளும் நச்சுப் பொருள்களும் எளிதில் வெளியேறுகின்றன. செரிமான உறுப்புகள் ஒய்வு பெறுகின்றன.