குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிது. ஆனால் அதை சிலநேரம் நாமே வெகு சிக்கலான ஒன்றாக மாற்றி விடுகிறோம். அவ்வாறாக இல்லாமல் குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எப்படி என்பதைப் பார்ப்போம். குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள் பெரியவர்களை மட்டுமல்ல குழந்தைகளையும் பாதித்து விடுகிறது. 


குடும்ப சிக்கல்களை எளிதாகக் களைய சில டிப்ஸ்


மற்றவர்கள் பிரச்சனைக்குள் சென்று பாருங்கள்:


மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் அவர்களின் பிரச்சனை என்னவென்பதை அவர்களின் பக்கமிருந்து பார்க்கவும். அப்போதுதான் பிரச்சனை உண்மையில் என்னவென்பதை உணர முடியும். 


உங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்களுடைய பிரச்சனைகளை உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தான் பிரச்சனைகளை மனம் விட்டுச் சொல்ல வருவார்கள் அப்போது அவர்களிடம் அதரவாகப் பேசுங்கள். நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டாம்.


புரிதல் ஏற்படுத்துங்கள்


மற்றவர்களைப் பற்றி முன் முடிவுகளுடன் அணுகாதீர்கள். அவர்களைப் பற்றிய தவறானப் புரிதலைக் கைவிடுங்கள். உங்கள் மனத் தடங்கல்களை அகற்றினால் உங்களால் மற்றவர்களை எளிதாக அணுக முடியும்.


காட்டமான வாக்குவாதங்களை தவிர்க்கவும்


நீங்கள் காட்டமான வாக்குவாதங்களை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் கோபத்தில் பேசும் பல வார்த்தைகளுக்கு பின்னர் அர்த்தம் இல்லை என்பதை உணர்வீர்கள். ஆனால் அப்போது உணர்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. 


டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது எப்படி?


இந்த கால கட்டத்தில் பிள்ளைகளின் மனம், மூளை, உடல் என அனைத்து வகையிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதனால் மாறி மாறி உணர்ச்சிகள் தோன்றும். குறிப்பாக, பிள்ளைகள் வளரும் பருவங்களில் டீன் ஏஜ் பருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருக்கும் கடினமான பருவமாகும். குழந்தையாகவும் அல்லாமல் வாலிபராகவும் அல்லாமல், இடைப்பட்ட ஒரு நிலையில், பதின்பருவ காலத்தில் ஒவ்வொரு பிள்ளையும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ளும். எனவே, 13- 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் எதைப் பற்றியெல்லாம் எப்படியெல்லாம் பேசலாம் என்பதை பெற்றோர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.


 உங்கள் குழந்தையை திட்டுவது அல்லது அவர்கள் செய்தது தவறு மிக நீண்ட நேரம் அட்வைஸ் பண்ணுவது ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் தவறு செய்தாலும் அல்லது நீங்கள் விரும்பாத எதைச் இருந்தாலும் அவர்களுக்கு அதைப் புரிய வைக்க, ஜாலியான முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும்.  


பிள்ளைகள் வீட்டிலிருக்கும் நேரங்களில் அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுங்கள். இருவரும் புத்தகங்களைப் படித்து விவாதிக்கலாம். யோகா, நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகளுக்கு சேர்ந்து செல்லலாம்.