உங்கள் காலைப் பொழுதை புத்துணர்வுடன் தொடங்க வேண்டுமா இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க. காலையில் எழுந்திருக்கும் போது நமக்கு அவ்வளவு சீக்கிரம் படுக்கையை விட்டு எழுந்து கொள்ள மனம் வராது. காரணம் படுக்கையில் இருந்து எழுந்த அடுத்த நொடி நாம் உலக வாழ்க்கையின் அழுத்தங்களுக்குள் தான் கால் வைக்கிறோம் என்பது தெரியும். தூக்கம் என்பது நமக்கு அந்த விடியலை எதிர்கொள்ள தேவைப்படும் ஒரு சார்ஜ் மோட்.


நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு நாளை நாம் எதிர்கொண்டு தானே ஆக வேண்டும். ஆகையால் அதை எளிதாக எதிர்கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கான மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு நாம் தான் வகுக்க வேண்டும். இருப்பினும் சில எளிய வழிமுறைகள், எல்லோருக்கும் பொருந்தும் நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை உங்களுக்காக பட்டியலிடுகிறோம்.


காலை எழுந்தவுடன் தண்ணீர் அருந்துங்கள்:


காலை கண்விழிக்க பெட் காஃபி வேண்டும்... வண்டிக்கு பெட்ரோல் மாதிரி நமக்கு டீ வேண்டும்... இப்படியெல்லாம் காலை எழுச்சிக்கு பலரும் பல விஷயங்களை சொல்வதுண்டு. அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் அருந்திப் பருங்கள். இது உங்கள் உடலின் லிம்ஃபாடிக் சிஸ்டத்தை சீராக வைக்க உதவும். இதை தமிழில் நிணநீர் மண்டலம் என்று சொல்வார்கள்.  நிணநீர் மண்டலமானது நிணநீர் கணுக்கள், மண்ணீரல், அடிநாச் சதைகள், எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸ் சுரப்பியைக் கொண்டுள்ளது.  இது உடலில் உள்ள செல்களை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நிணநீர் மண்டலம் உடலின் வேண்டாப் பொருட்களை வெளியேற்றும் வடிகாலாகவும் செயல்படுகிறது. உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புக்களில் தேங்கியுள்ள, அதிகமாயிருக்கும் வேண்டா திரவப் பொருட்களை சேகரிக்கிறது. பின்னர் அதை ரத்த ஓட்டத்தில் திருப்பி அனுப்புகிறது. 




வைட்டமின் டி தவறவிடாதீர்கள்


வைட்டமின் டி உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அது காலை வெயிலில் இயற்கையாகக் கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும். 
ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது.


காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள்


அதிகாலையில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் உடல் வியர்க்க செய்யும் பயிற்சிகள் தான் நாள் முழுவதுக்குமான ஆரோக்கியத்தை தரும்.


தியானம் செய்யவும்
உடலுக்கு தேவையான உணவு, உறுதி செய்ய உடற்பயிற்சி எல்லாம் பட்டியலிட்டுவிட்டோம். அடுத்தது என்னவென்று பார்த்தால் தியானம் தான் பட்டியலில் இருக்கிறது. உங்கள் மனதின் எண்ணங்களை சீராக வைத்துக் கொள்ள தியானம் செய்யுங்கள்.


இந்த 4 பழக்கவழக்கங்களையும் பின்பற்றினால் எல்லாம் நலமே.