தலைப்பை படித்துவிட்டு 'டீ'-யுடன் பெட்ரோல் விலையை ஒப்பிடுவதால் இதை அரசியல் கட்டுரை என்று எண்ணிவிடாதீர்கள், உண்மையில் லிபியா நாட்டில் இதுதான் தற்போதைய நிலை. ஆனால், இந்தியாவில் பெட்ரோலின் விலை நூறைத் தாண்டி ₹102 ரூபாய் 63 பைசாவுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை ₹102.63 ரூபாய் முதல் ₹102.74 ரூபாய் வரை ஏறி இறங்கி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டில் நிலைமை இப்படி இருக்க மற்ற நாடுகளில் விற்கப்படும் பெட்ரோல் விலை நிலவரங்களை நமது ரூபாய் மதிப்பீட்டில் எவ்வளவு வருகிறது எனப் பார்க்கலாம்.


லிபியா : 


லிபியாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 2.44/-
(0.15 லிபியன் தினார்)
1 லிபியன் தினார் = ₹ 16.37/- ரூபாய்


ஈராக் : 




ஈராக்கில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 40.78/-
(743.16 ஈராக் தினார்கள்)
1 ஈராக் தினார் = ₹ 0.055/- ரூபாய் 


சவுதி அரேபியா 


சவுதி அரேபியாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 49.33/-
(2.32 சௌதி ரியால்கள்)
1 சௌதி ரியால் = ₹ 21.28/- ரூபாய் 


ரஷ்யா


ரஷ்யாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 65.86/-
(45.88 ரஷ்ய ரூபிள்கள்)
1 ரஷ்ய ரூபிள் = ₹ 1.44/- ரூபாய்


வங்காளதேசம்


வங்காளதேசத்தில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 75.53/-
(88.62 பங்களாதேஷ் டாக்காக்கள்)
1 பங்களாதேஷ் டாக்கா = ₹ 0.85/- ரூபாய் 


மாலத்தீவு


மாலத்தீவுகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 85.70/-
(16.45 மாலத்தீவு ரூஃபியாக்கள்)
1 மாலத்தீவு ரூஃபியா = ₹ 5.21/- ரூபாய் 


ஜப்பான்


ஜப்பானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 97.57/-
(¥168.58 யென்கள்)
1 யென் = ₹ 0.58/- ரூபாய் 


பூடான்




பூட்டானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.52/-
(100.38 பூட்டான் நிகுல்ட்ரம்கள்)
1 பூட்டான் நிகுல்ட்ரம் = ₹ 1/- ரூபாய் 


இலங்கை


இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 121.23/-
(545.03 இலங்கை ரூபாய்கள்
1 இலங்கை ரூபாய் = ₹ 0.22/- இந்திய ரூபாய் 


கனடா




கனடாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 127.12/-
($ 2.05 கனடா டாலர்கள்)
1 கனடா டாலர் = ₹ 62.16/- ரூபாய் 


ஜெர்மனி


ஜெர்மனியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 145.79/-
(€ 1.78 யூரோ)
1 யூரோ = ₹ 81.69/- ரூபாய் 


இஸ்ரேல்


இஸ்ரேலில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 189.13/-
(8.13 இஸ்ரேல் ஷேக்கல்கள்)
1 இஸ்ரேல் ஷேக்கல் = ₹ 23.26/- ரூபாய்


இப்போது சொல்லுங்கள் இந்தியாவில் ஒரு கப் 'டீ'-ன் விலைக்கு லிபியாவில் இருந்திருந்தால் 4 லிட்டர் பெட்ரோல் போடலாம் தானே? ஆனால் அதற்குள் இங்கு சமையல் எரிவாயு விலையேற்றத்தால் 'டீ'-ன் விலை ஏறாமல் இருக்க வேண்டும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


Car loan Information:

Calculate Car Loan EMI