சர்வதேச அளவில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப்பொருளாக உள்ளது தான் ஓட்ஸ். இதில் நமது உடலுக்குத் தேவையான, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான தையமின், துத்தநாகம், மெக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு மினரல்கள் அதிகமாக உள்ளது. இதோடு மட்டுமின்றி பீட்டா குளுகான் என்ற எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத்தக்க வகையிலான வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கிறது. ஓட்ஸினை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் என பெரும்பாலானோர் இதனைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக இதனைப்பாலில் கலந்து சாப்பிடுவதோடு மட்டுமில்லாமல் 3 வேளைகளிலும் சாப்பிடக்கூடிய வகையில் 32 வகையான உணவுப்பொருள்களை இதில் தயாரிக்கலாம்.. அப்படி என்னென்ன ரெசிபி? 



ஓட்ஸினால் செய்யப்படும் காலை உணவுகளின் பட்டியல்:


ஓட்ஸ் உப்மா: தென்னிந்தியாவில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை உணவு உப்மாதான். அதேபோன்றுதான் ஓட்ஸின் மூலம் காய்கறி கலந்த உப்புமாவினை சுலபமாக செய்யலாம்.


ஓட்ஸ் தோசை: தூள் ஒட்ஸ் மூலம் செய்யக்கூடிய உணவு வகையாகும். நாம் எளிமையாக மற்றும் உடனடியாக காலை சமையலை முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களிடம் உள்ள மீதமுள்ள தோசை மாவோடு தூள் ஓட்ஸினைக் கலந்து தோசை செய்யலாம். இதனுள் மசாலா அல்லது காய்கறிகளை வதக்கிப் போட்டு சேர்த்தும் சமைக்கலாம்.


தேங்காய் ஓட்ஸ்: rolled oats-ஐக் கொண்டு தேங்காய் மற்றும் மசாலாப்பொருள்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய துரித காலை உணவு தான் தேங்காய் ஓட்ஸ். தயிருடன் சேர்ந்து இதனைச்சாப்பிடலாம்.


ஓட்ஸ் முட்டை ஆம்லெட்: காலை உணவிற்கு முட்டை ஆம்லெட்டுகளை நீங்கள் வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இதேப்போன்று ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் ஊத்தாப்பம், ஓவர்நைட் ஓட்ஸ், காய்கறி ஓட்ஸ் கஞ்சி,  உலர்ந்த பழங்கள் கொண்ட ஓட்ஸ் கஞ்சி, சாக்லேட் ஓட்ஸ்,ஓட்ஸ் கீர் அல்லது ஓட்ஸ் பாயாசம் போன்ற பல்வேறு ரெசிபிகளை காலை உணவாக செய்யலாம்.


 ஓட்ஸினால் செய்யப்படும் மதியம் மற்றும் இரவு நேர உணவுப் பட்டியல்:


சுவையான ஸ்டீல் கட் ஓட்ஸ் - மிகவும் சுவையான பருப்பு மற்றும் ஸ்டீல்கட் ஓட்ஸ், ஒரு பானை செய்முறையை நீங்கள் விரும்பும் எந்த காய்கறிகளிலும் செய்யலாம்.


ஓட்ஸ் பிசிபெலேபாத்: ஓட்ஸ் மற்றும் பருப்பு கலந்த காய்கறிகள் மற்றும் மசாலா பொடிகளுடன் சமைக்கப்படுகிறது.


தயிர் ஓட்ஸ்: தயிரில் சமைத்த ஓட்ஸை கலந்து தயாரிக்கப்படும் ஒரு எளிய சுவையான உணவாகும். பின்னர் அது மசாலா மற்றும் மூலிகைகள் மூலம் மென்மையாக்கப்படுகிறது.



மசாலா ஓட்மீல்: இந்திய மசாலா அல்லது மசாலாப் பொருட்களுடன் சமைக்கப்பட்ட ஓட்ஸ். ஒரு நல்ல காலை உணவை உருவாக்குகிறது.


ஓட்ஸ் கிச்சடி: வட இந்திய பாணி கிச்சடி கலந்த காய்கறிகள் மற்றும் மூங் பருப்புடன் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் வேறு எந்த பருப்பையும் பயன்படுத்தலாம்.  மேலும் ஓட்ஸ் காய்கறி சூப், Oats coconut ladoo, Oat dry fruits ladoo, போன்ற குழந்தைகளுக்குப் பிடித்த பல்வேறு உணவு வகைகளை ஓட்ஸினைக் கொண்டு தயாரிக்கலாம்.