Diabetes | உங்க சுகர் கட்டுக்குள்ள இருக்கணுமா? நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டிய 3 யோகாசனங்கள்!

யோகா பயிற்சிகள் தினம் செய்வதன் மூலம், இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். சர்க்கரை வியாதிக்கு என்று சில ஆசனங்கள் இருக்கிறது.

Continues below advertisement

நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கும். இன்சுலின் சரியாக செயல்பட வில்லை என்றால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். யோகா பயிற்சிகள் தினம் செய்வதன் மூலம், இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். சர்க்கரை வியாதிக்கு என்று சில ஆசனங்கள் இருக்கிறது.

Continues below advertisement

யோகா பயிற்சிகள், வாழ்வியல் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், வளர்சிதை மாற்றம், ஹார்மோன் சுரப்பது, உடல் இயக்கங்கள் சீராக இயங்க யோகா பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உறுப்புகள் சீராக இயங்க வைக்க, மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும், யோகா உதவுகிறது. சில யோகா பயிற்சிகள், நீரிழிவு நோயாளிகளின் வாழ்வியல் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பச்சிமோத்தாசனம்  - அமர்ந்த நிலையில் செய்யும் ஆசனம். விரிப்பின் மீது அமர்ந்து, இரண்டு கால்களையும், முன்னோக்கி நீட்டி, நேராக அமரவும். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, மூச்சை வெளியிட்டு முன்னோக்கி குனியவும். நெற்றி முழங்காலில் தொடும் அளவும் குனிய வேண்டும். நெற்றி முழன்காலில் தொடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். முதல் முயற்சியில் இந்த பயிற்சியை செய்ய முடியாது. தொடர்ந்து பயிற்சி செய்வதால், இதை செய்ய முடியும்.


பவன முக்தாசனம் - படுத்த நிலையில் செய்யும் ஆசனம். மல்லாந்து படுத்து கொண்டு, இரண்டு கால்களையும், மடித்து, வயிற்றின் மீது வைத்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளாலும், கால்களை பிடித்து வயிறை நோக்கி சற்று அழுத்த வேண்டும். மெதுவாக தலையை தரையில் உயர்த்தி, முழங்கால் மற்றும் தலை இரண்டும் சேர்ந்து இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். இது பவன முக்தாசனம்.  இயல்பான சுவாசத்துடன் செய்யும் பயிற்சி. தொப்பை இருப்பவர்களுக்கு இது செய்வதற்கு கடினமாக இருக்கும். தினம் பயிற்சி செய்தல், உடலில் வளைவு தனமாய் அதிகமாகி ஆசனம் செய்வதற்கு எளிமையாக இருக்கும்.


மண்டூகாசனம் - விரிப்பின் மீது இரண்டு கால்களையும் மடித்து,முட்டி போட்ட மாதிரி வைத்து கொள்ள வேண்டும். தலை கழுத்து முதுகு நேராக வைத்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளின் விரல்களை மடித்து அடி வயிற்றில் வைத்து, மூச்சை விட்டுக்கொண்டே முன்னோக்கி குனிய வேண்டும். இது போன்று 5 முறை செய்ய வேண்டும். இயல்பான சுவாசத்துடன் செய்ய வேண்டும்.


யாரெல்லாம் இந்த பயிற்சிகளை செய்ய கூடாது

முதுகு வலி, முழங்கால் வலி, உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும்.

எந்த யோகா பயிற்சிகளையும், சரியான பயிற்சியாளரிடன் கற்று கொண்டு, முறையாக செய்ய வேண்டும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola