ஐபிஎல் தொடரில் எப்போதும் சென்னை-மும்பை அணிக்களுக்கு இடையேயான போட்டி என்றால் எப்போதும் விறு விறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பட்டம் வென்ற அணிகள் என்றால் அது சென்னை மற்றும் மும்பை தான். மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். கடந்த 4 ஐபிஎல் தொடரில் சென்னை அல்லது மும்பையே கோப்பையை கைப்பற்றி வருகின்றனர். அதனால் இம்முறையும் கோப்பையை வெல்ல சென்னை-மும்பை அணிகள் இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் தற்போது வரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் மும்பை 6 போட்டிகளிலும் சென்னை ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளசிஸ் காயம் குணம் அடைந்து சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி சென்னை அணியில் தோனி,ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, டுபிளசிஸ், ரெய்னா, ஜடேஜா,தீபக் சாஹர், ஷர்தல் தாகூர்,பிராவோ,ஹேசல்வூட் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறவில்லை. எனவே அணியின் கேப்டனாக பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன்,டி காக், பொல்லார்டு,சூர்யகுமார் யாதவ்,அன்மோல்பிரீத் சிங், குருணல் பாண்ட்யா,ராகுல் சாஹர்,சவுரப் திவாரி,பொல்ட், பும்ரா, மில்னேஉள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இன்று தன்னுடைய 100 ஆவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இதனால் அவர் ஒரு பிரத்யேக ஜெர்ஸியின் விளையாட உள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மே 1ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 218 ரன்கள் அடித்திருந்தது. அதை மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டு(87*) அதிரடி ஆட்டத்தால் சேஸ் செய்து சிறப்பான வெற்றியை பெற்றது. இதனால் இந்தப் போட்டியில் அந்த தோல்வி நல்ல பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நடப்பு தொடரில் நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 2 தோல்வி மற்றும் 5 வெற்றியை பெற்றுள்ளது. அதேசமயத்தில் மும்பை அணி தற்போது வரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளது. ஆகவே இரண்டாவது பாதியை வெற்றியுடன் தொடக்க இரு அணிகளும் தீவிரமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: சி.எஸ்.கே.,வும் பொல்லாதவன் பொல்லார்டும்..மும்பை அணி ஆபத் பாந்தவனின் அதிரடி ஆட்டங்கள்!