என்ன உணவு பாதுகாப்பில் தொழில் நுட்பம் வளர்ந்து இருந்தாலும், அனைத்து பயன்பாடும், அனைத்திற்கு சரியானதாக  இருக்காது. உணவு பாதுகாப்பில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மிக முக்கியமானது குளிர்சாதனப்பெட்டி அதாவது ஃபிரிட்ஜ் . இதில் அனைத்து உணவு பொருளும் வைத்து பயன்படுத்தக் கூடாது. இது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். என்னென்ன பொருள்கள் வைத்து பயன்படுத்தக் கூடாது என தெரிந்து கொள்வோம்.


முட்டை - சிலர் முட்டைகளை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால்முட்டைகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது.  வெளியில், ஈரப்பதம் இல்லாத இடங்களில் பாதுகாப்பாக வைத்தாலே போதுமானது. நாம் அவ்வப்போது பயன்படுத்துவதால் முட்டையை வெளியிலேயே வைத்துகொள்ளலாம்.




                                      


வெள்ளரிக் காய் - இதை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். இதன் தோல் பகுதி அதிக குளிராக வைக்க தேவை இல்லை. ஒரு வெள்ளரிக்காயை வெட்டினால், அன்றே அதை பயன்படுத்தி விட வேண்டும். பாதி பயன்படுத்தி விட்டு , மீதி பாதியை பிரிட்ஜில் வைக்க வேண்டாம்.




பிரட் - இதை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம். இதை அதிக காய்ந்த தன்மையை தரும்.




ஆரஞ்சு - பொதுவாக பழங்களை ஃபிரிட்ஜில் வைப்பது தான் வழக்கம். அப்படி வைத்தால் தான் பழங்கள் கெட்டுப்போகாது. ஆனால் ஆரஞ்சுக்கு அது தேவையில்லை.இதில் அதிக வைட்டமின் சி சத்து  இருக்கிறது.இது நீரில் கரையும் வைட்டமின் ஆகும். இதை ஃபிரிட்ஜில் வைத்தால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறைபாடு வரும். அதனால் ஆரஞ்சுகளை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.




வெங்காயம் - வெங்காயம் பிரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போய் விடும். அதை நல்ல காற்றோட்டமாக வைத்தால் போதுமானது.




தர்பூசணி - இதை பாதி பயன்படுத்தி விட்டு மீதி பாதியை பிரிட்ஜில் வைத்தால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறைந்து விடும்.அதனால் தர்பூசணியை பிரிட்ஜில் வைக்க வேண்டாம்.




உருளைக் கிழங்கு - இதை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். இதில் அதிக அளவு ஸ்டார்ச் ஊட்டச்சத்து உள்ளது. இதை பிரிட்ஜில் வைத்தால் தோல் நிறம் மாறி விடும். நல்ல காற்றோட்டமான  வைத்தால் போதுமானது.




சாக்லேட் - இதை பிரிட்ஜில் வைக்க வேண்டாம். இதில் சுவை மாறி விடும். அதனால்  சாக்லேட் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.




தேன் - இதை பிரிட்ஜில் வைக்க கூடாது. இது வெளியில் வைத்தால் வருட கணக்கில் கெட்டு போகாமல் இருக்கும். இதில் பிரிட்ஜில் வைத்தால் கட்டியாக மாறிவிடும். பயன்படுத்த முடியாமல் போய்விடும்.




கத்தரிக்காய் - இதை  பிரிட்ஜில் வைத்தல், இதன்  தன்மை மாறி விடும்.




வாழைப் பழம் - இதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.  இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் இழந்து விடும்.