உடல் செயல்பாடுகளில் ஏதாவது கோளாறு என்றால் அதை கண்டுப்பிடிப்பது கொஞ்சம் எளிதானது. ஆனால், மனநலன் சார்ந்த பிரச்சனைகளை கண்டுகொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. பல நேரங்களில் நாம் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அதிகமாக யோசித்து கொண்டிருப்பது பற்றிய எல்லாம் எளிதில் தெரிந்துவிட வாய்ப்பில்லை. மன சோர்வு, மன அழுத்தம், எப்போதும் சோகமாக உணர்தல், உணர்வுகளை கையாள்வதில் சிரமம் இப்படி நிறைய சிக்கல்களை நாம் எதிர்கொள்வோம். தேவையெனில் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். அன்றாடம் நம் நாட்களை ஆரோக்கியமானதாக மாற்ற, மன ஆரோக்கியத்துடன் வாழ சில வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதை இக்கட்டுரையில் காணலாம். 


உடற்பயிற்சியை போலவே மன ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்கு பயிற்சி செய்வது அவசியமானது.


யோகா


தினமும் யோக அல்லது அமைதியா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். காலை எழுந்ததும் மொபல் ஃபோனை பயன்படுத்தாமல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றதுவது, அமைதியாக எந்த யோசனையும் இல்லாமல் டீ அருந்துவது போன்ற மனது மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடலாம்.


உடற்பயிற்சி


தினமும் உடற்பயிற்சி செய்வது மனதை அமைதியாக வைத்துகொள்ள உதவும். குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது தினமும் உடற்பயிற்சி செய்ய ஒதுக்கலாம்.


தூக்கம்


தூக்கம் பரபரப்பான வேலைகளில் இருந்து ஓய்வெடுக்கும் வழியாகும். 


10-3-2-1-0 பார்முலா:


ஃபிட்னஸ் கோச் Martolia, நிம்மத்தியான தூக்கத்திற்கு சொல்லும் டிப்ஸ்கள் இவை; தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது, படுக்கைச் செல்வதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே எல்க்ட்ரானிஸ் கேட்ஜட்களைத் தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நிம்மத்தியாக தூங்கலாம். இதை பழக்கமாகவும் மாற்றிகொள்ளலாம்.


உரையாடல்


அன்பானவர்களோடு உரையாடுவது, பிரச்சனைகளை பகிர்ந்துகொள்வது மிகவும் அவசியம். அதுவே எமோசனல் சப்போர்ட் ஆக இருக்கும். 


ஸ்கிரீன் டைம் 


எப்போதும் ஸ்மார்ட்போன்களில் எதையாவது பார்த்து கொண்டிருப்பதை தவிர்க்கலாம். தேவையான அளவு மட்டுமே ஸ்க்ரீன் டைம் இருப்பது நல்லது. 


தொடரட்டும் கற்றல்


தினமும் எதையாவது ஒன்றை கற்கலாம். பிடித்தமானதை கற்றுக்கொள்ளலாம். 


உணர்வு வெளிபாடு


கலை, எழுத்து, இசை, ஓவியம் வரைதல் என்று ஏதாவது ஒன்றின் மூலம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது உங்களுக்கு உதவும். 


ஆதரவை நாடுவது நலம்


கையாள முடியாத சூழல் நீடித்தால் அதை நிச்சயம் உங்களைப் புரிந்து கொள்பவர்களிடம் வெளிப்படுத்தலாம். இல்லையேல் மருத்துவர்களை அணுகுவது நலம்.


தூக்கம் வராதது ஏன்? பாதிப்பு என்ன?


ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதது, சரியான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவற்றினால் தூக்கம் பாதிக்கப்படும்.


இரவு நேரத்தில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது உள்ளிட்ட எல்க்ட்ரானிக் கேஜட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கம் வருவதில் சிக்கல்கள் இருக்கும். 


இரவு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிகமாக காரம், எண்ணெய்  உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில்,  உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும்.செரிமானக்கோளாறுகள் ஏற்படும்.


மனதில் எதையாவது நினைத்து கவலைப்படுவது, மனஅழுத்தம், மன உளைச்சல் இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும். இவையெல்லாம் 'ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா' ஏற்பட முக்கியக் காரணங்கள்.


தொடர்ந்து தூக்க பிரச்சனைகள் இருப்பதால், இதயக் கோளாறு, பக்கவாதம், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம்,போன்ற மற்ற உடல்நலக்  கோளாறுகளும் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.