இன்று பெரும்பாலோனோர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. நாள் முழுவதும் வேலை பார்த்தும், இரவு படுக்கைக்கு சென்றால் தூக்கம் வராமல் நீண்ட நேரம் போன் பார்த்து விட்டு, இரவு 1 மணிக்குமேல் தூங்குவது, காலை நேரம் கழித்து எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு செல்வது, பழகி இருக்கும். இரவு தூங்காமல் இருந்து விட்டு அடுத்த நாள் காலை எழும் போது புத்துணர்ச்சி குறைந்து சோர்வும், தூக்கமும் வரும். இந்த நாள் புத்துணர்வுடன் இருக்காது. தேவையில்லாத மனஅழுத்தம், வேலை செய்யமுடியாமல் தேங்க ஆரம்பிக்கும். இரவு தூங்கவில்லை என்றால் ஹார்மோன் குறைபாடுகள் வரும். இதனால் உடல் எடை அதிகமாதல், மாதவிடாய் பிரச்சனை, நீரிழிவு நோய் போன்ற வாழ்வியல் முறை பிரச்சனைகள் வரும்.
இதை தடுக்க இரவு 6-8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதுவும், இரவு 10 மணியில் இருந்து காலை 5 அல்லது 6 மணி வரை தூங்குவது கட்டாயம். இந்த நேரத்தில் உடல் முழுவதும் ஓய்வு எடுத்து அடுத்த நாள் காலை வேலை செய்ய ஏதுவாக இருக்கும்.
- தூங்கும் அறை முழுவதும் இருட்டாக இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும். சுத்தமாகவும், படுப்பதற்கு ஏதுவாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.
2. தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். 10 மணிக்கு தூங்கச்சென்றால் இரவு 8 மணிக்கு முன் இரவு உணவு எடுத்து இருக்க வேண்டும்.
3. தூங்கும் அறையில் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, டிவி, போன், லேப்டாப் பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.
4.தூங்குவதற்கு முன் 30 நிமிடம் காலார நடைபயற்சி செய்யுங்கள்.
5.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பதும் தூங்குவதற்கு உதவும்.
6.மாலை வேளைகளில் டீ காபி குடிப்பதை தவிர்த்திடுங்கள் இதில் இருக்கும் காபின் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
7.பகலில் தூங்குவதை தவிர்த்திடுங்கள்
8.தினமும் காலை உடற்பயிற்சி செய்யுங்கள். இது இரவு தூக்கத்திற்கு உதவும்.
9.மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்த்திடுங்கள். இது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.
10.ஆவியில் வேகவைத்த , சீக்கிரம் செரிமானம் ஆக கூடிய உணவுகளை இரவில் எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தூக்கம் வராது
ஆரோக்கியமான உணவும், தூக்கமும் உடலுக்கு இயற்கை கொடுத்த மருந்துகள். அதை சரியாக பயன்படுத்துவோம்