நாம் அன்றாடம் செய்யும் சில பழக்கங்கள் உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். என்ன பழக்கம் என்ன பிரச்சனை ஏற்படுத்தும் என தெரிந்து கொள்வோம்.



  • காலை உணவு தவிர்த்தல் - காலை எழுந்ததும் அலுவலகத்திற்கு செல்வதற்கு நேரம் ஆகிவிட்டால் அவர்கள் முதலில் தவிர்ப்பது காலை உணவை தான். இரவு நீண்ட நேரம் உணவு எடுத்து கொள்ளாமல் இருந்துவிட்டு காலை எடுத்து கொள்ளும் முதல் உணவு , அன்றைய நாளுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. கட்டாயம் காலை உணவை எடுத்து கொள்ளுங்கள்.





  • காபி - அனைவர்க்கும் காபி பிடித்த பானமாகும். இதனுடன் அதிகமான கிரீம் கலந்த பால் மற்றும், செயற்கை சர்க்கரை எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.





  • வேகவேகமாக சாப்பிடுவது - உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சிலர் உணவை அப்டியே விழுங்கி விடுவார்கள். உணவை அப்டியே விழுங்குவது உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.





  • தவறான காலணிகளை பயன்படுத்துவது, குதிங்கால் வலி, கால் வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளை தரும். உயரமான காலணிகள் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்





  • இரவு பல்துலக்காமல் இருப்பது. இரவு தூங்குவதற்கு முன் பல் துலக்குவது, வாய் சுத்தமாக இருக்கவும், வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். பெரும்பாலோனோர் இரவில் பல் துலக்கும் பழக்கத்தை மறந்து விடுகின்றனர்.





  • போதுமான அளவு தூங்காமல் இருப்பது. தூக்கம் குறைவாக இருந்தாலும், உடல் எடை அதிகமாகும். குறைவாக தூங்குவது, வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் வளர்சிதை மாற்றம் முறையாக இல்லையென்றால் உடல் எடை அதிகமாகும்.





  • இன்று இளைஞர்கள் அதிகமானோர், அதிக எடை தூக்கும் பயிற்சிகள் செய்கின்றனர். ஆனால் கார்டியோ, வெளியில் நடைப்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்க்கின்றனர்.





  • காலை எழுந்ததும் உடற் பயிற்சி - காலை எழுந்ததும் உடற் பயிற்சி செய்ய வேண்டும். சில எளிமையான பயிற்சிகள் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.





  • காலை கடன்களை காலையில் முடிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். மலம் வெளியேற்றுவது போன்றவற்றை காலை எழுந்ததும் வெளியேற்ற வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.





  • லேப்டாப் பைகளை நீண்ட நேரம் தோளில் போட்டு இருப்பது. இது தோள்பட்டை வலி, கழுத்து வலி வருவதற்கு காரணமாக அமையும்.


இவை எல்லாம் அன்றாடம் நாம் செய்யும் விஷயங்கள். இதை செய்தல் என்ன பிரச்னை வரும் என்று தெரியாமல் செய்து கொண்டு இருப்பார்கள். இது போன்ற பழக்கங்களை  மாற்றி கொள்ளுங்கள்.