இந்திய இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் 18 மாவட்டங்கள் 


நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்டம்பர் 2025 -ம் மாதத்தில் இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் அரியலூர், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர் மற்றும் காரைக்கால் ( புதுச்சேரி மாநிலம்) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது.


Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை


பணியிட விபரம்


இந்த ஆட்சேர்ப்பு முகாமில் General Duty, Technical Duty, Clerk / Store Keeper Technical, Tradesman (10-ம் வகுப்பு), Tradesman (8-ம் வகுப்பு) போன்ற பிரிவுகளுக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். 8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான விண்ணப்பங்கள் வட்டார கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர் சான்றொப்பமிட்ட மதிப்பெண் சான்றிதழுடன் இருக்க வேண்டும்.


வயது மற்றும் கல்வித் தகுதி


இந்திய இராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் 17 ½ முதல் 21 வயது வரை இருக்க வேண்டும். தற்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்திருப்பவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Gold Rate Hike: உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...


விண்ணப்பிக்கும் முறை:


இந்திய இராணுவத்தில் பணியாற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in இணையதளத்தில் சென்று 2025 ஏப்ரல் 10 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.


Sunita Williams: சொன்னதை செய்த டிரம்ப்! பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்.. தலைவர்கள் வாழ்த்து..


பொதுத்தகவல்:



  • ஆட்சேர்ப்பு முகாம் செப்டம்பர் 2025 மாதம் நடைபெறவுள்ளது.


 



  • www.joinindianarmy.nic.in இணையதளத்தில் சென்று ஏப்ரல் 10, 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.


 



  • இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றும் கனவை நனவாக்கிக் கொள்ள இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.  


 


இந்திய இராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், தேச சேவையை முன் நிறுத்தி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் அறிவுறுத்தியுள்ளார்.