வெளிநாடு போனால் சீக்கிரம் சம்பாரித்துவிட்டு, கடனையெல்லாம் அடைத்துவிடலாம், பணம் சேர்த்து வைத்தால் விரைவில் ஊருக்கு திரும்பி ஏதேனும் ஒரு தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று நினைத்து வெளிநாட்டிற்கு ஏராளமான தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் படையெடுத்து செல்கின்றனர்.
வெளிநாடு செல்லும் இளைஞர்கள் படும் அவஸ்தை
சரியாக படிப்பின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத் உள்ளிட்ட நாடுகளில் சமையல் வேலை தொடங்கி, கட்டுமானம், ஓட்டுநர் வேலை வரை எப்படியாவது சம்பாதித்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு புறப்பட்டு செல்லும் பலர் தங்களது மனதிடத்தால், வைராக்கியாத்தால் கடுமையான பணியாக இருந்தாலும் ஒருவழியாக சமாளித்து ஏதோ சம்பாதித்துவிடுகிறார்கள். சிலர் மட்டும் ஏஜெண்டுகளை நம்பி, பணத்தாசையால் பால இடங்களில் அடிமைகளாக சிறைவைக்கப்படுவதும் அவர்களை மீட்க அந்த ஏழை குடும்பத்தினர் அந்த வறுமையிலும் போராடுவதும் தமிழ்நாட்டில் எப்போதும் தொடர்கதைதான்.
ஏஜெண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டம்
எந்த நிறுவனத்திற்கு வேலைக்கு செல்கிறோம், அது பாதுகாப்பானதுதானா ? என்றெல்லாம் தீர விசாரிக்காமல், ஏஜெண்டுகள் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி கனவு கோட்டை கட்டிவிட்டு அப்படியே போய் சிக்கிக்கொள்ளும் தமிழர்களும் நாளுக்கு நாள் இங்கு இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்கு செல்வோர்கள் அரசிடம் பதிவு செய்துவிட்டு சென்றால், ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டால் கூட விரைவாக அவர்களை மீட்டுவிட முடியும். ஆனால், ரூரிஸ்ட் விசா உள்ளிட்டவைகளை பல நாடுகளுக்கு சென்று எப்படியாவது சம்பாதித்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் அரசின் வழிகாட்டுதல்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை
விளைவு, ஏஜெண்டிகளிடம் பணம் கட்டி ஏமாறுவது, வெளிநாடு சென்று மாட்டிக்கொள்வது என இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் படும் கஷ்டம் சொல்லி மாளாது.
ஆசை வார்த்தை கூறி ரஷ்யாவிற்கு அழைக்கும் கும்பல்
அதே பாணியில், இளைஞர்களை குறி வைத்து, ஒன்றரை லட்சம் சம்பளம், எந்த முன்பணமும் கட்டத் தேவையில்லை, விசா, பயண செலவு என அத்தனையும் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது என ஆசை காட்டி தமிழர்களை ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்ல குறி வைத்து ஒரு கும்பல் செயல்பட்டு வருவது மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரிய வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைவைத்திருக்கிறது.
போரில் ஈடுட ஆட்களை கடத்தும் கும்பல் – எச்சரிக்கை
இந்த ஆசை வார்த்தைகளை நம்பி யாரேனும் ரஷ்யா சென்றால், அவர்களுக்கு அங்கு பணி என்ன தெரியுமா ? உக்ரைனுக்கு எதிராக போராட வேண்டும், எந்த பயிற்சியும் இன்று போராடுபவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதற்கு மறுத்தால், துன்புறுத்தல் தொடங்கி சொல்ல முடியாத கொடூரங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
யூடிபூப் – சமூக வலைதளங்கள் மூலம் வலை
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இந்தியா முழுவதும் பல்வேறு நபர்கள் ஏழை இளைஞர்களை குறி வைத்து ரஷ்யாவிற்கு கடத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான ஏஜெண்டுகளையும் நாடு முழுவதும் அந்த அமைப்பு நியமித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வலையில் விழும் நபர்களை மூளைச் சலைவை செய்து, ரஷ்யாவிற் கொண்டுச் சென்று போரில் ஈடுபட வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இது தொடரபாக கடந்த மார்ச் மாதத்திலேயே சிபிஐ வழக்கு பதிவுச் செய்து விசாரித்து வாந்த நிலையில், இப்போது அது தீவிரமடைந்துள்ளதால், நாடு முழுவதும் சோதனை நடந்து வருகிறது.
கேரளா, தமிழ்நாட்டில் தீவிர சோதனை
கேரளா மாநிலத்தில் நடத்தப்பட்ட சோதனையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆருண் பிரியன என்ற யேசு தாசை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதே மாதிரி மும்பையில் தங்கியிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை செர்ந்த நிகில் ஜோபி, அந்தோணி மைக்கில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, ஈரோடு, மதுரை, சேலம உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்