TNPL-இல் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்.. ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் ஜன.20-க்குள் அப்ளை பண்ணுங்க..

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள 84 Semi skilled worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Continues below advertisement

சுற்றுச்சூழலைப்பாதிக்காத வகையில் செய்தித்தாள் மற்றும் எழுத்துவதற்குரிய அனைத்து வகையான காகிதங்களையும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம் தயாரித்து வருகிறது. கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த ஆலையில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது Semi skilled worker பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்திற்கான தகுதிகள்:

Semi-Skilled Worker (C)& (B) (Chemical)

காலிப்பணியிடங்கள் – 41

கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Diploma in Chemical Engineering/ Chemical Technplogy/pulp&paper technology முடித்திருக்கவேண்டும். மேலும் இதே துறையில் 5- 10 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.

 Semi-Skilled Worker (C)& (D) (Mechanical)

காலியிப்பணியிடங்கள் - 21

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பிட்டர் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். இதோடு 5-10 ஆண்டுகள் பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.

Semi-Skilled Worker (C)& (D) (Electrical)

காலிப்பணியிடங்கள் - 12

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். இதோடு 5-10 ஆண்டு பணி முன் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு -  விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.

Semi-Skilled Worker (C)& (D) (Instrumentation)

காலிப்பணியிடங்கள் -  10

கல்வித் தகுதி : Diploma in Instrumentation Engineering / Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics & Instrumentation Engineering  (Or)

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக் பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேலும் 5-10 ஆண்டு பணிஅனுபவம் வேண்டும்.

வயது வரம்பு -  விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு .

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.tnpl.com/work-with-us/ என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் வாயிலாக வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்படிவத்தை முழுமையாக நிரப்பிய பின்னர், அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, இப்பணியிடங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தை அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

GENERAL MANAGER-HR,

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED TNPL UNIT-II,

MONDIPATTI, K.PERIYAPATTI (POST),

MANAPPARAI (TK),

TRICHY DISTRICT-621306, TAMILNADU.

தேர்வு முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

Semi -Skilled (C) : ரூ. 44,538

Semi -Skilled (B) : ரூ. 50,512

Semi -Skilled (D) : ரூ.43,830 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.tnpl.com/work-with-us/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola