தமிழக அரசின் வேலைவாய்ப்பு திட்டங்கள்

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் பல நகரங்களில் தொழில்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்காக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடன் உதவிக்காக வழிகாட்டவும் செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய காலத்தில் திருமணங்களுக்கு வீடியோ எடுப்பது மட்டுமல்ல வீடியோ எடிட்டிங் செய்வதில் பணமானது அதிகளவில் கிடைத்து வருகிறது. 

Continues below advertisement

இதனையடுத்து தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திட்டத்தின் கீழ் "திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி" வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வரும் 01.12.2025 முதல் 05.12.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Continues below advertisement

திருமண புகைப்பட, வீடியோ பயிற்சி

இப்பயிற்சியில் திருமண புகைப்படம் எடுத்தல் என்றால் என்ன.? புகைப்படம் எடுத்தல் பற்றிய வரலாறு, புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, கலவை மற்றும் மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள் கவனம் செலுத்தும் முறைகள், உயர்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம் வடிவமைப்பு, பாரம்பரிய புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள், நேர்மையான புகைப்படம் எடுத்தல் மேம்பட்ட நுட்பங்கள். திருமண உருவப்படங்கள் மேம்பட்ட நுட்பங்கள். உங்கள் குழுவை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல், திருமண புகைப்படக் கலைஞர் மற்றும் திருமணமாக எப்படி சம்பாதிப்பது புகைப்பட வணிகம். திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி.?

எனவே இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி /கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், - 600 032. 8668102600/9943685468.