ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 168  பேராசிரியர், உதவி பேராசிரியர் என பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அக்டோபர் 4  ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் இந்தியாவில் நியூசிலாந்து நாட்டு நிதி உதவியுடன் டெல்லியில் அமைப்பதற்கு 1952 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு 1956 ஆம் ஆண்டு முதல் எய்ம்ஸ் மருத்துவமனை தன்னாட்சி பெற்ற நிறுவனமாக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக டெல்லியில் துவங்கப்பட்டது. இங்கு மற்ற மருத்துவமனைகள் போல் இல்லாமல் உலக தரத்திலான சிகிச்சை அளிப்பதற்காக சிறந்த மருத்துவ வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள். மேலும் இங்கு ஆண்டும் மருத்துப்படிப்பை 100 மாணவர்கள் மற்றும் செவிலியர் படிப்பினை 60 பேர் வரை படித்துவகின்றனர். இதோடு மருத்துவத்துறை சார்ந்த 42 வகையான படிப்புகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் என 168 பேர் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவராக நீங்கள் இருந்தால் என்னென்ன தகுதிகள்? தேவை என்பதை இங்கே அறிந்துக்கொள்ளுங்கள்.





ராய்ப்பூர் எய்ம்ஸில் பேராசிரியர் ஆவதற்கான தகுதிகள்:


பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 58 வயதிற்குள் மற்றும் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  50 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணிக்கான தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் தகுதியும் பணி முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.alimsraipur.edu.in என்ற இணையதளப்பக்கத்திற்கு  ஆன்லைனில் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூபாய் 1000, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 800 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.





எனவே மேற்கண்ட தகவலின் படி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் விண்ணப்பக்கடிதத்தினை பிரிண்ட அவுட் எடுத்து அதனுடன் கல்விச்சான்றிதழ் மற்றும் இதர தேவையான சான்றிதழ்களை இணைத்து அதனை Recruitment cell, 2nd floor, Medical college Building, AIIMS Raipur,  Raipur . Pin – 492 099 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு அறவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.aiimsraipur.edu.in/upload/vacancies/611b7f3068657___Final%20approved%20Advt.pdf என்ற இணையப்பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.