கோயம்புத்தூரில் உள்ள டைடல் பூங்காவில் தொழிலக டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளநிலையில் CA Intermediate தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பீளமேடு பகுதியில் பல்வேறு தகவல் ஐடி நிறுவனங்களுடன் டைடல் பூங்கா செயல்பட்டுவருகிறது. இங்கு பல்வேறு நிறுவனங்களில் பல பணியார்கள் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். அதன் படி தற்போது டைடல் பார்க்கில் தொழிலக டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு என்னென்ன தகுதி தேவை? என்பதை இங்கே அறிந்துக்கொள்வோம்..
கல்வித்தகுதி : CA Intermediate தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கோவை டைடில் பார்க்கில் தொழிலக டிரெய்னியாக விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் தங்களைப்பற்றிய முழு விபரம் அடங்கிய சுய குறிப்பை hr@tidelcbe.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அல்லது Chief Financial Officer & Head – HR, TIDEL Park Coimbatore Limited, 1st Floor, ELCOSEZ, Civil Aerodrome Post,Coimbatore 641 014. Tel : 0422-2513605 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது கொரியரில் அனுப்பலாம்.
தேர்வு முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான நேர்முகத்தேர்வ வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். மேலும் CA Intermediate படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
உதவித்தொகை : தொழிலக டிரெய்னியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நேரம் : டைடில் பார்க்கில் காலை 9.30 மணி முதல் மாலை 5.45 வரை அலுவலகம் செயல்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள், 12 மாதம் மட்டுமே தொழிலக டிரெய்னியாக நியமனம் செய்யப்படுவார்கள். ஒருவேளை டிரெய்னி காலத்தில் பணியில் முன்னேற்றம் இல்லை எனில் அவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பயன்படுத்தலாம். வேலை வாய்ப்பு கோவையில் என்றாலும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை www.tidelcbe.com அல்லது http://www.tidelcbe.com/Notification%20of%20professional%CA.pdf என்ற பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.