CRPF எனப்படும் துணை ராணுவ மருத்துவமனைகளில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள் அக்டோபர் 27-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
இந்தியாவில் துணை ராணுவ படைகளில் ஒன்று தான் சிஆர்பிஎப். தற்போது துணைபடை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவத் தேவைகளை நிறைவேற்றி வருகிறது சிஆர்பிஎஃப் மருத்துவமனைகள். இந்நிலையில் இந்த மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கான அரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Dental surgeon, superSpecialist medical officer, Medical officer க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் வேறு என்னென்ன தகுதிகள்? உள்ளது என இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Dental surgeon ஆவதற்காக தகுதிகள்:
சிஆர்பிஎப் மருத்துவமனையில் Dental surgeon பணிபுரிய நினைப்பவர்கள், மருத்துவத்துறையில் பிடிஎஸ் முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் நபரக்ள் 35 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்கு வேண்டும்.
Super Specialist medical officer பணிக்கான தகுதிகள்:
சிஆர்பிஎப் மருத்துவமனையில் 206 Super Specialist medical officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
Medical officer பணிக்கான தகுதிகள்
சிஆர்பிஎப் மருத்துவமனையில் 343 மருத்துவ அதிகாரிபணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருமத்துவதுறையிர் எம்பிபிஎஸ் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதோடு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ரூ.400 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்குக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை: Dental surgeon, superSpecialist medical officer, Medical officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் பணி அனுபவம் கவனத்தில் கொள்ளப்படும். மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாார்களுக்கு மட்ட் ரேந்முகத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.
எனவே துணை ராணுவத்தின் மருத்துவ அதிகாரியாக ஆசைப்படும் நபர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் கூடுதல் விபரங்களை www.recruitment.itbpolice.nic.in இணையதளத்தில் வெளியாகி அறிவிப்பின் மூலம் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.