திருப்பூர் மாநாகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் (NUHM) செயல்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • நகர சுகாதார செவிலியர்கள்

  • ஆய்வக நுட்புநர்

  • மருத்துவமனை பணியாளர் 


கல்வித் தகுதி:


செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க B.Sc. நர்சிங் / Auxillar Nurse Midwife Course , General Nursing and Midwife என்ற துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 


ஆய்வக நுட்புநர் பணிக்கு ’Medical labaratory Technology துறையில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 


மருத்துவமனை பணியாளர் பணிக்கு எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்



  • நகர சுகாதார செவிலியர்கள் - ரூ.14,000

  • ஆய்வக நுட்புநர் - ரூ.13,000

  • மருத்துவமனை பணியாளர் -ரூ.8,500


கவனிக்க..



  • பணியிடங்கள் மாறுதலுக்குட்பட்டது.

  • நேர்காணலில் தகுதி பெற்று காத்திருக்கு பட்டியில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்திற்குள் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.

  • முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

  • பணியின்தன்மையானது முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலான தற்காலிகப் பணியாகும்


தேர்வு செய்யப்படுவது எப்படி?


திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் காலை 10 மணிமுதல் மதியம் 3 மணிவரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் (2 எண்ணிக்கை) கலந்து கொள்ளலாம். 


தொலைபேசி எண் - 0421 -2240153


நேர்காணலின்போது கீழ்க்காணும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.



  • 10ம் மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • கல்விச் சான்றிதழ்

  • தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ் 

  • ஆதார் அட்டை நகல்

  • குடும்ப அட்டை நகல் 


நேர்காணல் நடைபெறும் நாள் - 11.09.2023


நேர்காணல் நடைபெறும் இடம்


சுகாதாரப் பிரிவு


மாநகராட்சி அலுவலகம்


திருப்பூர்


*****


தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் (National Urban Health Mission) கீழ் புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் கண்காணிப்பில் உள்ள முள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கான ஒப்பந்தம் அடிப்படையிலான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  


பணி விவரம்:



  • Radiographer (கதிர்ப்பட உதவியாளர்

  • அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர்

  • ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் 

  • சுகாதார பணியாளர்

  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

  • பாதுகாவலர்


பணியிடம்: புதுக்கோட்டை


கல்வித் தகுதி:



  • கதிர்ப்பட பதிவாளர் பணிக்கு B.Sc.Radiology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • M.Sc., in Disability studies / ASLP)/MBBS/BAMS/BHMS உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெறிருக்க வேண்டும். பி.எட். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • சுகாதார பணியாளர், பல்நோக்கு மருத்துவமனை, பாதுகாவலர் ஆகிய பணிகளுக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • Radiographer (கதிர்ப்பட உதவியாளர் -ரூ.13,300/-

  • அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர் -ரூ.11,200/-

  • ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் - ரூ.17,000

  • சுகாதார பணியாளர்-ரூ.8,500

  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.8,500

  • பாதுகாவலர் - ரூ.8,500


எப்படி விண்ணப்பிப்பது? 


சுய விவர குறிப்புடன், தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 


கவனிக்க:


இந்தப் பணி 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலானது. நிரந்தர பணி வாய்ப்பு அல்ல. 


பணி தேர்ந்தெடுக்கப்படுவோர் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். 


தேர்தெடுக்கப்படுவர்கள் புதுக்கோட்டையில் செயல்படும் சுகாதார மையங்கள் / அரசு மருத்துவமனை பணியமர்த்தப்படுவர்.


இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஒரு மாதத்திற்கு (one month notice) முன்பே அறிவிப்புடன் ஒப்பந்தம் முடித்துக்கொள்ளப்படும். 


சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்: 


சுய விவர குறிப்பு
கல்விச் சான்றிதழ்கள்
அனுபவ சான்றிதழ்
Consent Letter


விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2023,  5 மணிவரை 


அறிவிப்பின் முழு விவரத்துக்கு.. https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2023/08/2023083123.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்


முகவரி :


முதல்வர்,


அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,


புதுக்கோட்டை