மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ்செயல்படும்  தக்‌ஷின் பாரத்தின் (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 




பணி விவரம்:



  • LCD

  • சமையலர்

  • MTS Messenger 

  • MTS Garderner 


கல்வி மற்றும் பிற தகுதிகள் 



  • சமையலர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

  • LCD பணிக்கு விண்ணப்பிக்க ப்ளஸ் -2 படித்திருக்க வேண்டும். 

  • MTS (Messenger) பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • MTS (Gardener) பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின/ பழங்குடியினர் பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.


ஊதிய விவரம்:



  •  LDC - ரூ.19,900/-

  •  Cook - ரூ.19,900/- 

  • MTS (Messenger) - ரூ.18,000/- 

  • MTS (Gardener) - ரூ.18,000/- 


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு விண்ணப்பிக்க https://indianarmy.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். டைப்பிங் தேர்வும் நடத்தப்படும்.


தேர்வு நடைபெறும் இடம்:


இதற்கு தகுதித் தேர்வு சென்னையில் உள்ள ’Island Grounds’-ல் நடைபெறுகிறது.


விண்ணப்பிக்க கடைசி தேதி: இந்த அறிவிப்பு வெளியாகி 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


******


திருப்பதி ஐ. ஐ.டி. வேலைவாய்ப்பு


திருப்பதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:



  • துணை நூலகர்

  • துணை பதிவாளர்

  • ஜூனியர் கண்காணிப்பாளர்

  • ஜூனியர் உதவியாளர்

  • ஜூனியர் இந்தி உதவியாளர் 

  • ஜூனியர் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்

  • ஜூனியர் தொழில்நுட்ப அலுவலர் 

  • உடற்பயிற்சியாளர்


கல்வித் தகுதி:



  • துணை நூலகர் பணியிடத்திற்கு Library Science / Information Science / Documentation படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • துணை பதிவாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருக்க வேண்டும். Finance & Accounts/ CA/ICWA  படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  • ஜூனியர் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • ஜூனியர் உதவியாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

  • ஜூனியர் இந்தி உதவியாளர் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்: 


இந்தப் பணிகளுக்கு Pay Level -12, Pay Level-6, Pay Level -3, Pay Level-5 என்ற வரைவுபடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: 


https://iittp.plumerp.co.in/prod/iittirupati/staffrecruitment - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: 



  • குரூப் ஏ பணிக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

  • குரூப் பி & சி பணிக்கு Objective- Based Test, எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


தொடர்புக்கு .-- rmt_queries@iittp.ac.in


 பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்  - https://iittp.ac.in/pdfs/recruitment/2023/Detailed%20advertisement%20-%20Staff%2002-2023.pdf


விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.09.2023




மேலும் வாசிக்க..


Udhayanidhi Complaint: சனாதன தர்மம் சர்ச்சை.. பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பறந்த புகார்..