ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் வழக்குப் பணியாளராக பணிபுரிய   தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான இந்திய அரசின் சிறப்புத் திட்டம்

சமூக நலத் துறையின் மூலம், விருதநகர், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான இந்திய அரசின் சிறப்புத் திட்டம் - (One Stop Centre)   ஒருங்கிணைந்த சேவை மையத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker)-1 பணியிடம் தொகுப்பூதியம் முறையில் நிரப்பப்படவுள்ளது.  விண்ணப்பதாரர் விருதநகர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 35 வயதுக்குள்  இருத்தல் வேண்டும். சமூகப்பணி, சமூகவியல், உளவியல் துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கியதில் ஒரு வருட அனுபவம்  பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,800/- வழங்கப்படும்.  தகுதியான நபர்கள் 30.11.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement