விருதுநகர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.

Continues below advertisement

தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய  முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவ அலுவலர் (Medical Officer) -1, சுகாதார ஆய்வாளர்  நிலை (Health Inspector)-4, துணை செவிலியர் (Auxilary Mid Wife) (ANM)-3, மருத்துவமனை பணியாளர் (II) (Hospital Worker)-2,  ரேடியோகிராபர் (Radiographer) -2, முதன்மை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) (Senior Treatment Supervisor) (STS)-1, பாதுகாவலர் (Security Guard)-1, செவித்திறன் நிபுணர்/பேச்சுப் பயிற்சியாளர் (Audiologist/Speech Therapist)-1

Continues below advertisement

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

மேற்காணும் பதவிகளுக்கான விண்ணப்பம், கல்வித்தகுதி வயது வரம்பு ஆகியவற்றை விருதுநகர் மாவட்ட இணையதளத்தில் (http://virudhunagar.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப்பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணி நியமனத்திற்கான ஒப்பந்த பத்திரம் அளிக்கவேண்டும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.

சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்

விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 06.07.2026 மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண்:126, முதல் மாடி, விருதுநகர் - 626 002 அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.