சிறுபான்மையின மக்களுக்கு தற்கால தேவைகளுக்கேற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Developement Training)

 விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையின (முஸ்லிம்கள், கிறித்தவர்கள். சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள்) சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள், மகளிர் மற்றும் வேலைவாய்ப்பற்ற நபர்களின்  பொருளாதார (ம) சமூக மேம்பாட்டினை உயர்த்தும் வகையில்  தற்கால தேவைகளுக்கேற்றவாறு  தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ஆடை வடிவமைப்பு, அழகு மற்றும் ஆரோக்கியம், எம்பிராய்டரி, விவசாயம், பொருட்கள் மற்றும் உற்பத்தி, கட்டுமானம், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவுத் தொழில்கள், மரச்சாமான்கள் மற்றும் பொருத்துதல்கள், இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், பசுமை வேலைகள், கைவினை, சுகாதாரம், தோல், சரக்கு மேலாண்மை, சந்தைப்படுத்தல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பிளம்பிங், எலக்ட்ரீஷியன், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், ஜவுளி மற்றும் கைத்தறி, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்  உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Developement Training) வழங்கப்படவுள்ளது.

Continues below advertisement

உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்திட வேண்டும்

 இப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முஸ்லிம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினராக இருக்க வேண்டும். 8-ம் வகுப்பு முதல் பட்டயப்படிப்பு வரை பயிற்சிகளுக்கு ஏற்ப. விண்ணப்பதாரர் வயது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி வழங்கப்படும். ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சிகளுக்கு ஏற்றாற்போல் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முழுவதுமாக முடிப்பவர்களுக்கு பயிற்சிக்கான அரசு சான்றிதழ் வழங்கப்படும்.  மேற்கண்ட பயிற்சிகள் பெற விரும்பும் நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5-வது தளத்தில் (அறை எண்- 505) இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று 20.11.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.