விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
இரவு காவலர்
அலுவலக உதவியாளர்
ஈப்பு ஓட்டுநர்
கல்வித் தகுதி
- இதற்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திகுட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
- வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- கொரோனா தொற்றினாலோ, இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளம் மகன் / மகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் விவரம்
- இரவு காவலர் - ரூ. 15,700 (ரூ.15,700 - 50,000/-)
- அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 (ரூ.15,700 - 50,000/-)
- ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500/- (ரூ.19,500 - ரூ.62,000)
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு தேவையான ஆவணங்களின் நகல்களுடன் https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ - என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இரவு காவலர் பணி
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
சாத்தூர்.
அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணி
அணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
விருதுநகர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 04.12.2023
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/12/2023122112-1.pdf / https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/12/2023121344.pdf -என்ற இணைப்பி க்ளிக் செய்து காணவும்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஜனவரி,01,2024 வரை விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist)
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary)
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- இணை முதன்மை மருத்துவர் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
- மூத்த உதவி செயலாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Absorption / Deputation முறையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி காலம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.
ஊதிய விவரம்:
அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் 1,80,000 வரை இதற்கு ஆரம்ப கால ஊதியமாக வழங்கப்படும். (ரூ.20,600-46,500 prerevised / ரூ. 10750-16750 pre-pre-revised))
எப்படி தேர்வு செய்யப்படுவர்:
இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்க..
இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/applications.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20spl%2024-11-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Filling%20up%20of%20the%20post%20SRAS%20absorption%20deputation.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.01.2024