விழுப்புரத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினரை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு வரும் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


பணி விவரம்


தலைவர் மற்றும் உறுப்பினர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்


விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல்/ மனநலம்/ சட்டம்/ சமூகப் பணி/ சமூகவியல்/ மனித ஆரோக்கியம்/ கல்வி/ மனித மேம்பாடு/ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் எதேனும் ஒன்றில் கண்டிப்பாக பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.


விழுப்புரம் சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை


இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இல்லை.


 மாவட்டம் சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


ஊதிய விவரம்


அரசு விதிமுறைகளின்படியே தேர்வாகும் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.


வேலைக்கான அறிவிப்பு பிப்ரவரி 17,2024 அன்று வெளியாகி உள்ளது. அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 


The Director,
Directorate of Social Defence,
 No.300, Purasaiwalkam High Road, Kellys, 
Chennai – 600 010.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.03.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/02/2024021726.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


வங்கி வேலைவாய்ப்பு


நாட்டின் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங் ஆஃப் இந்தியா (Central Bank of India) வங்கியில் காலியாக உள்ள 3,000 தொழில்பழகுநர் (apprentices) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


தொழில்பழகுநர் பணி  - 3000


கல்வித் தகுதி


மேற்கண்ட பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடற் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.


பணி இடம்


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.


வயது வரம்பு


இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 01.04.1996 முதல் 31.03.2004 -க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.


ஊக்கத்தொகை




விண்ணப்பிப்பது எப்படி? 


www.nats.education.gov.in -  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:'


இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். 


ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி காலம்


இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. , பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்ப கட்டணம் 




விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.03.2024


உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 10.03.2024


இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification-Engagement-of-Apprentices-2024-25.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.