கிராம உதவியாளர் நியமனத்திற்கான வயது வரம்பை உயர்த்தி வருவாய்த் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பொதுப் பிரிவினருக்கு 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பிசி/ எம்பிசி பிரிவினருக்கு 39 ஆகவும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கான வயது வரம்பு 42 ஆகவும் உயர்த்தப்பட்டு, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

2 ஆயிரம் பிளஸ் காலி இடங்கள்

மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2199 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை, மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் வருவாய்த் துறை நிரப்பிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான குறைந்தபட்ச வயது 21 வயது ஆகவும் அதிகபட்ச வயது 32 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதேபோல பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் /பட்டியலினத்தவர் / பழங்குடியினருக்கு 37 வயது நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வயது வரம்பை உயர்த்தி வருவாய்த் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Continues below advertisement

ஊதியம் எவ்வளவு?

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பாக, 42 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாத வருமானம் ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு எப்படி?

  • மெரிட் பட்டியல்
  • நேர்காணல்

கல்வித் தகுதி

தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலைப்பள்ளி தேர்வில் (SSLC Secondary School Leaving Certificate Examinations) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பள்ளி ( SSLC School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிற தகுதிகள்

    1. விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
    2. தமிழில் பிழையின்றி வாசித்தல் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    3. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    4. உடற் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    5. மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
    6. விண்ணப்பதாரர் மீது எவ்வித வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது. பணி நியமனத்திற்கு விண்ணப்பதாரருடைய ஒழுக்கமும் முன்வரலாறும் தகுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.