திருநெல்வேலியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலியாக உள்ள பணியிடங்கள்

அதன்படி முதுநிலை சிகிச்சை கண்காணிப்பாளர் (senior treatment supervisor) பணியிடம் ஒன்று, டிபி சுகாதார பார்வையாளர் (TB Health Visitor) பணியிடங்கள் இரண்டு, இடைநிலை ஹெல்த் ப்ரொவைடர் (Mid Level Health Provider) பணியிடங்கள் இரண்டு, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணியிடம் ஒன்று, துப்புரவாளர் (Cleaner) பணியிடம் ஒன்று, மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) பணியிடம் ஒன்று ஆகியவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

Continues below advertisement

இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தரப் பணி அல்லது முன்னுரிமை போன்ற சலுகைகளை பிற்காலத்தில் உரிமை கோர இயலாது. 

இதற்கான விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in/ என்ற திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் வரும் 20205 டிசம்பர் 9ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்வி தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் தகுதியானவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேரிலோ அல்லது தபால் மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகம் 2021 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி சென்னை எம் ஐ டி வளாகத்தில் உள்ள கணினி தொழில்நுட்பத் துறையில் மொத்தம் 15 ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ப்ராஜெக்ட் அசோசியேட் நிலை 2 (Project Associate - Level II) பதவிக்கு ஐந்து இடங்களும், ப்ராஜெக்ட் இன்டெர்ன்ஸ் (Project Interns) பதவிக்கு பத்து இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன இவை அனைத்தும் ஒப்பந்த வேலைகள் ஆகும் இதற்கான விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறையில் பெறப்படுகிறது. 

Project Interns பணியிடங்களுக்கு B.E/B.Tech/M.E/M.Tech/PhD (CSE/IT) படித்து வரும் மாணவர்கள் தகுதியானவர்கள் எனவும், Project Associate பணிக்கு M.E/M.Tech (CSE/IT) முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிள்ளது. மேலும் Cloud Platform, Linux, C/C++, MATLAB, Python தெரிந்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணபிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.