விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மருத்துவத் துறையைச் சார்ந்த பல்வேறு பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

Continues below advertisement


மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மருத்துவ பணியிடங்கள் நிரப்பம் 


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மருத்துவத் துறையைச் சார்ந்த பல்வேறு பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கோயில் மருத்துவ மையத்தில் மருத்துவர் – 2 இடங்கள்,   உதவி செவிலியர் – 2 இடங்கள் ,   நர்சிங் அசிஸ்டெண்ட் – 2 இடங்கள் என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி:


மருத்துவர் : எம்பிபிஎஸ் (MBBS) முடித்திருக்க வேண்டும்.


உதவி செவிலியர் : செவிலியர் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


நர்சிங் அசிஸ்டெண்ட்  : 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


சம்பள விவரம்:



  • மருத்துவர்   – 36,700 முதல் 1,16,200 வரை மாத சம்பளம்

  • உதவி செவிலியர்   – 18,500 முதல் 58,600 வரை

  • நர்சிங் அசிஸ்டெண்ட்   –  11,600 முதல் 38,800 வரை


தேர்வு செய்யப்படும் நபர்கள் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலின் மருத்துவ மையத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமுள்ளவர்கள்   [hrce.tn.gov.in] (https://hrce.tn.gov.in)   என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 24 


  முகவரி: உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604202.


முக்கிய நிபந்தனைகள்:



  • விண்ணப்பதாரர்கள் இந்துமதத்தைச் சார்ந்தவராகவும் , தமிழகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

  •  குற்றப் பின்னணி அல்லது நீதிமன்ற தண்டனை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை.

  •  நன்னடத்தைச் சான்றிதழ் மற்றும் நல்ல உடல்நிலை   அவசியம்.


மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்பவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.