சென்னையில் புகழ்பெற்றவைகளில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்று. இந்த திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்தப் பணிகளுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சேர்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்:


இளநிலை உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 


தட்டச்சர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.  தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை முடித்திருக்க வேண்டும்.


கணினி பயன்பாடு மற்றும்  படிப்பில் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும். 


ஓட்டுநர் பணிக்கு  எட்டாம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இலகு ரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  முதலுதவி குறித்த சான்றிதழ் அவசியம். ஒராண்டு ஒட்டுநர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு மாத ஊதியமாக  ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை வழங்கப்பட உள்ளது.


 


உதவி மின் பணியாளர்


இந்தப் பணிக்கு ரூ.16,600 முதல் ரூ. 52,400 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின்கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


நாதஸ்வரம் வாசிப்பவர்:


தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து சம்பந்தப்பட்ட துறையில்  சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 19,500 முதல் 62,000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.


உதவி அர்ச்சகர்  


மாத ஊதியம்: ரூ.15,900 - ரூ.50,400


 தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட  நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் ஒராண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


உதவி பரிச்சாரகம்   02 தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் கோயில்களின் பழக்க வழக்கங்களுக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


மாத ஊதியம்- ரூ.15,900 - ரூ.50,400


உதவி சுயம்பாகம் 


 தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வழபழனி கோயிலின் அறிவுத்தப்பட்டியும், கோயில்களின் வழக்கங்களின்படி  பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.


மாத ஊதியம்- ரூ.10,000- ரூ.31,500


வேதபாராயணம் 


 தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மாத ஊதியம்- ரூ.15,700 ரூ.50, 000/-


வயது வரம்பு:


 01.09.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 


விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை காண https://hrce.tn.gov.in/hrcehome/index.php பணியிட விபரங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, நிபந்தனைகள் மற்றும் மேலும் கூடுதல் விவரங்களை அலுவலகத்திற்கு (வேலை நேரங்களில்) நேரில்  சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


துணை ஆணையர்/ செயல்அலுவலர்,


அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,


வடபழநி, சென்னை-26 


விண்ணப்பிக்க கடைசித் தேதி:


விண்ணப்பதாரர்கள் தங்கள் முழு விவரங்களை பூர்த்தி செய்து .04.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். 


விண்ணப்ப படிவத்தை காண


https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf


முழு விவரங்களை தெரிந்து கொள்ள https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf என்ற லிங்கில் காணலாம்.