வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist)
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary)
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- இணை முதன்மை மருத்துவர் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
- மூத்த உதவி செயலாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Absorption / Deputation முறையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி காலம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.
ஊதிய விவரம்:
அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் 1,80,000 வரை இதற்கு ஆரம்ப கால ஊதியமாக வழங்கப்படும். (ரூ.20,600-46,500 prerevised / ரூ. 10750-16750 pre-pre-revised))
எப்படி தேர்வு செய்யப்படுவர்:
இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்க..
இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/applications.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20spl%2024-11-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Filling%20up%20of%20the%20post%20SRAS%20absorption%20deputation.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.01.2024
தேனி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழு . இளைஞர் நீதிக்குழுமத்தில் (Child welfare committee and juvenile justice board ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் கல்வியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தட்டச்சு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதியம் - ரூ.11,916
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க https://theni.nic.in/ - என்ற இணையதளத்தை க்ளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த பல்துறை வளாகம்,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி மாவட்டம் - 625531
விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.01.2023
இது தொடர்பான மேலதிக தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2024/01/2024010471.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.