UPSC Recruitment 2023: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 261 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Air Worthiness Officer, Livestock Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.
பணி விவரம்
- Air Worthiness Officer
- Air Safety Officer
- Livestock Officer
- Junior Scientific Officer (Ballistics)
- Junior Scientific Officer (Biology)
- Junior Scientific Officer (Chemistry)
- Junior Scientific Officer (Physics)
- Public Prosecutor
- Junior Translation Officer
- Assistant Engineer Grade-I
- Assistant Survey Officer
- Principal Officer (Engineering)
- Senior Lecturer (General Medicine)
- Senior Lecturer (General Surgery)
- Senior Lecturer (Tuberculosis & Respiratory Diseases)
மொத்த பணியிடங்கள் - 261
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல் பட்டம், பி.டெக்.சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், எம்.எஸ்.சி. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 30 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 58 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ’Pay Matrix as per 7th CPC' அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும், Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/ பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு யு.பி.எஸ்.சி..-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php- என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MzQ5O2A7IMDADICAXCZC6SYHNSIQAKVGNLIC31XKAWXLCQKFJ5XA9P - என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை காணலாம்.
UPSC செயலி: அம்சங்கள் என்ன?
தேர்வு விவரங்கள், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், அவற்றுக்கான தேர்வு விவரங்கள், தேர்வு முடிவுகள், ஆள் சேர்ப்பு விவரங்கள், அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை செயலி வழியாகவே இனி மேற்கொள்ளலாம்.
இவை தவிர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் விவரங்களும் அவற்றுக்கான இணைப்பும் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செயலியைப் பதிவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.upsc.upsc - என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.