IAS, IPS உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெற்ற முதல்நிலைத் தேர்வின் முடிவு வெளியாகியுள்ளது. தேர்வின் முடிவை தெரிந்து கொள்ள, தேர்வர்கள் இந்த வலை பக்கத்திற்குச் செல்லவும். WR-CSP-24-RollList-Engl-010724.pdf (upsc.gov.in)
குடிமைப் பணித் தேர்வுகள்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் (IES) தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன.
மக்களவை தேர்தலானது ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனால், 2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி குடிமைப்பணி முதல்நிலை தேர்வானது மே 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 16 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வானது நடைபெற்றது.
முடிவு வெளியானது:
இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான முடிவானது, இன்று வெளியானது. தேர்வு எழுதியவர்கள், உங்களது விண்ணப்ப எண்ணை வைத்து முடிவை தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு, WR-CSP-24-RollList-Engl-010724.pdf (upsc.gov.in) அல்லது Welcome to UPSC என்ற வலைப்பக்கங்களில் சென்று பார்க்கலாம். அதில் உங்களது எண் இருக்கிறதா என பாருங்கள். உங்களது எண் இருந்தால் , நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள் என அர்த்தம். இதையடுத்து, அடுத்த முதன்மைத் தேர்வுக்கு தயாராகுங்கள்.
தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தளர வேண்டாம். இந்த தோல்வி, உங்களை மேலும் பலமானவராக மாற்றுவதற்கு என நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது தவறுகள் எங்கு உள்ளது என கண்டறியுங்கள், அதை சரிசெய்வதற்காக திட்டமிடலை மேற்கொள்ளுங்கள். அந்த தவறுகளை சரி செய்து அடுத்த முறை வெற்றி பெறுவதற்காக உழைப்பை கொடுங்கள். வெற்றி வசமாகட்டும்.