யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அழைப்பு விடுத்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், இந்த இடங்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் upsc.gov.in அல்லது upsconline.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
என்னென்ன காலி இடங்கள்?
அமலாக்க அதிகாரி/ கணக்கு அதிகாரி (56 பதவிகள்) உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (74 பதவிகள்)
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகள் இந்த பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணிக்கு, நிறுவனச் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் அல்லது பொது நிர்வாகத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படும். 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும் 2 பணியிடங்களுக்கும் சமூகப் பிரிவின்படி தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை
ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்பு தேர்வு (Combined Recruitment Test -CRT)
நேர்காணல்
75 சதவீதம் தேர்வு மற்றும் 25 சதவீதம் நேர்காணல் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
தேர்வு ஆஃப்லைன் முறையில் நடைபெறும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். நாடு முழுவதும் 78 நகரங்களில் இதற்கான தேர்வு நடக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://upsconline.nic.in/login என்ற இணைப்பை க்ளிக் செய்து லாகின் செய்ய வேண்டியது முக்கியம்.
பிறகு தேவையான விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம். முன்னதாக ஆகஸ்ட் 19 விண்ணப்பிக்கக் கடைசித் தேதியாக இருந்த நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: upsconline.nic.in