மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி,6-ம் (2024) தேதி கடைசி தேதி.

பணி விவரம்

உதவியாளர்

மொத்த பணியிடங்கள் - 300

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.37,000/- வழங்கப்படும். 

( ரூ.22405-1305(1)-23710-1425(2)-26560-1605(5)-34585-1855(2)- 38295-2260(3)-45075-2345(2)-49765-2500(5)-62265) 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 30.09.2023 -ன் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பிப்பது எப்படி?

https://uiic.co.in/recruitment/details/15004 - - என்ற இணையதள முகவரி மூலம் தேவையான தகவல்களை பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 

முக்கிய தேதிகள் 

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/ASSISTANT_RECRUITMENT_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.01.2024