தமிழ்நாடு மருத்துவப்பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள 174 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி..


கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீசியன் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிவருகின்றனர். தற்போது அரசின் உத்தரவின் படி, வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவது, மாதந்தோறும் மாத்திரைகள் வழங்குவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்வது போன்ற பல்வேறு பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் தான் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட் சேர்ப்பு வாரியத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் பணிபுரிய 174 கள உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் தான் உள்ள நிலையில் இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? தேர்வு முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





சுகாதாரத்துறையில் கள உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் : 174


பணிபுரியும் இடம் : சென்னை


கல்வித்தகுதி:


சுகாதாரத்துறையில் கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


மருத்துவக்கல்லி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் படித்துள்ள மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்ப பாடத்தில் தேர்ச்சி பெற்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இதோடு நல்ல உடலமைப்பு. நல்ல கண் திறன் பார்வை மற்றும் பொது இடங்களில் வேலை செய்யும் திறன் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.


வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18- 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், http://www.mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் வாயிலாக வருகின்ற நாளைக்குள் அதாவது பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்:


பொதுப்பிரிவினருக்கு ரூ.600ம், எஸ், எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 300 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் :


மேற்கண்ட முறைகளில் தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூபாய் 18200 – 57900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளுங்கள்.