சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தினசரி கூலி அடிப்படையில் காலியாக உள்ள தொழில்முறை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


சென்னை கிண்டியில் செயல்பட்டுவரும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 1978-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். பேராசிரியர்களுக்கு மட்டுமில்லாமல் அலுவலக உதவியாளர், தொழில்முறை உதவியாளர் போன்ற பல பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகக்கூடிய நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நுழைவுத்தேர்வு மையத்தில் காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இங்கு தொழில்முறை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையிலும், தினகூரி கூலி அடிப்படையிலும் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை ? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





அண்ணா பல்கலைக்கழகப்பணிக்கானத் தகுதிகள்:


தொழில்முறை உதவியாளர் (Professional Assistant – I)


காலிப்பணியிடங்கள் -2


கல்வித்தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech in CSE/IT போன்ற துறைகளில் தேர்ச்சிப்பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


சம்பளம் : இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு தினசரி ரூபாய் 797 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் : 1


கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு அல்லது அதற்கு குறைவாகப் படித்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – தினசரி ரூ.321 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சம்பளம் : தினசரி ரூ.321


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், தற்காலிக அடிப்படையில் பணிபுரிய ஆர்வமும் உள்ள நபர்கள், https://www.annauniv.edu/pdf/Staff%20Advt.pdf என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை முதலில் டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தவறில்லாமல் பூர்த்தி செய்து வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


The Director,


Centre for Entrance Examinations,


Anna University,


Chennai -600025.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இவ்வாறு தேர்வாகும் நபர்கள் தற்காலிக அடிப்படையில் , 6 மாத காலத்திற்கு மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.annauniv.edu/pdf/Staff%20Advt.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.