இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, மண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


அலுவலக உதவியாளர் 


இரவுக் காவலர் 


கல்வித் தகுதி 


அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இரவுக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 - ரூ.50,000/-


இரவுக்காவலர் -  ரூ. 15,700 - ரூ.50,000/- ( திருவாடானை, மண்டபம்)


விண்ணப்பிக்கும் முறை:



  • இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய விவர குறிப்பு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச் சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  • கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த விண்ணப்பதாரர்களுக்கு வட்டாட்சியரிடம் பெற்ற சான்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். 


திருவாடானை பகுதியிலுள்ள பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.01.2024 தேதி மாலை 5.45 மணிக்குள் 


மண்டபம் பகுதியிலுள்ள பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.01.2023 மாலை 5.45 மணிக்குள்


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023120775.pdf / https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2023/12/2023121473.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர்


ஊராட்சி ஒன்றியம்,


திருவாடானை.


இராமநாதபுரம் - 623 407 


*


ஆணையாளர் / வட்டார வளர்ச்சி அலுவலர்


ஊராட்சி ஒன்றியம்,


மண்டபம் (இ) உச்சிப்புளி 


இராமநாதபுரம் - 623 534 


டி.என்.பி.எல் நிறுவனத்தில் வேலை


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) இருக்கும் வேலை வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இக்கட்டுரையில் தரிந்துகொள்ளலாம்.


டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்திற்கான  தகுதிகள் என்னென்ன என்று கீழே காண்போம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 10 (2023)ஆம் தேதி கடைசி ஆகும். 


பணி விவரம்


துணை மேலாளர் 


கல்வித் தகுதி


இதற்கு விண்ணப்பிக்க  B.E. / B.Tech சிவில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


குறைந்தது 26 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


விண்ணப்பதாரர்கள் 46 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


பணி இடம்


கரூர்


ஊதிய விவரம்


இந்த பணிக்கு மாத ஊதியமாக ரூ.2.39 லட்சம் வழங்கப்படும். மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. திறன் அடிப்படையில் பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


 www.tnpl.com/careers - என்ற இணைப்பை க்ளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சுய விவர குறிப்பு வடிவத்தின் படி அஞ்சல் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி நாள் - 10/01/2023


அஞ்சல் முகவரி:


GENERAL MANAGER (HR)
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, 
KARUR DISTRICT, TAMIL NADU. 


https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/12/TNPL_DGM-Civil-Advt-27122023.pdf -- என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காணலாம்.