தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை - III பதவிக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. 


கொரோனா தொற்றினால் ஏற்பட்ட தள்ளி வைக்கப்பட்ட அரசின் பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் குரூப்-7 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இந்த பணிக்கு இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இவற்றின் ஊதியமாக ரூ. 20,600 முதல் ரூ.75, 900 வரை வழங்கப்படுகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதி சுற்று மதிப்பீட்டுத் தேர்வு மற்றும் பொது அறிவு அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். 


இதேபோல் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இந்து மதம், சைவமும் வைணவமும் ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகப்பட்சம் 37 வயதிற்குள்ளானவராகவும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள், முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. 


விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு கலை, அறிவியல், பொருளாதார பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரிகள் மூலம் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழி நன்கு கற்று தேர்ந்தவராக இருக்க வேண்டும். 


விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்முறை விண்ணப்பிப்பவர்கள் கூடுதலாக ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கூடுதல் கட்டணம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். TNPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== சென்று விண்ணப்பிக்க வேண்டும். 


மேலும் விபரங்களை அறிய https://www.tnpsc.gov.in/Document/english/12_2022_EO_GR_III_Notfn_Eng_host.pdf என்ற இணையதளப் பக்கத்தை காணலாம். விண்ணப்பிக்க ஜூன் 17 ஆம் தேதி நாள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் திருத்தம் மேற்கொள்ள ஜூன் 28 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண