TNPSC Group 1 Exam: குரூப் 1 தேர்வு மூலம் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள, துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 90 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


குரூப் 1 தேர்வு - 90 காலிப்பணிடங்கள்:


தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்ப்படும் அந்த வகையில், குரூப் 1 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவர். இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள 16 துணை ஆட்சியர் இடங்கள், 23 துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பணியிடங்கள், 14  வணிகவரித்துறை உதவி ஆணையர் பணியிடங்கள், 21 கூட்டுறவு துறை துணை பதிவாளர் பணியிடங்கள், 14 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பணியிடங்கள், ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பணியிடம் மற்றும் ஒரு மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பணியிடம் என மொத்த 90 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


2.38 லட்சம் விண்ணப்பங்கள்:


குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வெளியான நிலையில், டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து ஏப்ரல் 27ம் தேதி முடிவடைந்த விண்ணப்பிக்க கால அவகாசத்தில்,  2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆண்கள் 1,25,726 பேரும், பெண்கள் 1,12,501 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 20 பேரும் அடங்குவர். சென்னையில் மட்டும் குரூப் 1 முதல்நிலை தேர்வை 37,891 பேர் எழுதுகின்றனர்.


797 தேர்வு மையங்கள்:


இன்று நடைபெறும் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்காக,  38 மாவட்டங்களில் 797 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒரு அறைக்கு ஒருவர் வீதம் 797 முதன்மை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  சென்னையில் மட்டும் 124 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள்:



  • தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்போன் எடுத்து வரவும், வாட்ச், மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


  • குரூப் 1 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெறும்.




  • சரியாக 9 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும்.



  • தேர்வு மையத்திற்கு கட்டாயமாக அனுபதிச் சீட்டினை எடுத்துச் செல்ல வேண்டும். அதோடு, ஆதார் அட்டை/பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம/ பான் கார்டு/ வாக்காளர் அடையாள் அட்டை ஆகிய ஏதேனும் ஒன்றை எடுத்துசெல்ல வேண்டும்.

  • தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில், தேர்வரின் புகைப்படம் அச்சிசப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது தேர்வரின் தோற்றத்துடன் பொருந்தவில்லை என்றாலோ, தேர்வர்கள் தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி, அதில் தனது பெயர்,முகவரி, பதிவு எண் ஆகியவற்றி குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின் நகல் மற்றும் அடையாள அட்டை நகர் இணைத்து, தலைமைக் கண்காணிப்பாளரிடம் மேலோப்பமிடும் பொருட்டு சமர்பிக்க வேண்டும்.

  • ஓஎம்ஆர் தாளை கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும்.

  • தேர்வு அறைக்கு கருகை நிற பேனா, அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப் படுவர்.