TNPSC குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில், மொத்தமுள்ள 66 காலிப்பணியிடங்களில் 57 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.


குரூப் 1 தேர்வு:


தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பணிகளுக்கான தேர்வை TNPSC நடத்துகிறது. குரூப் 1 தேர்வானது மூன்று நிலை தேர்வாக நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவர், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு  அழைக்கப்படுவர். இறுதியாக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே, குருப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதில் ஏதேனும் ஒரு நிலை தேர்வில் தோல்வியுற்றால், மீண்டும் முதல்நிலை தேர்விலிருந்து எழுத வேண்டும். இதற்காக மீண்டும் ஒரு வருடம் தேர்வுக்காக காத்திருக்க வேண்டும்.


முடிவுகள் வெளியீடு:


இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை முதன்மை தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அதையடுத்து, இறுதி தேர்வு பட்டியல் ஜூலை 15 ஆம் தேதி வெளியானது. அதில் 66 நபர்கள் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.


பெண்கள் அசத்தல்:


அதில் 57 நபர்கள் பெண்கள் தேர்வாகி அசத்தியுள்ளனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த லாவண்யா என்பவர் 561.75 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். லாவண்யாவுக்கு திருமணமாகி 2 வயது மகனும் உள்ளார். லாவண்யா வெற்றி பெற்றது, போட்டி தேர்வுகளில் திருமணமான பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் பெண்களுக்கு, அரசு பணிகளில் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டாலும், பெண்களின் கடும் முயற்சியாலும், தமிழ்நாட்டின் உயரிய பொறுப்புகளில் பெண்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது, தமிழ்நாட்டில் பெண்கல்வி சிறந்து விளங்குவதை காட்டுகிறது. மேலும் எதிர்கால பெண்களுக்கும், தாங்களும் அரசு நிர்வாகத்தின் உயரிய பொறுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்ற ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண