தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாநில அரசின் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சியாளராக பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்திருந்தது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (10.01.2023) விண்ணப்பிக்கலாம். 


போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்:


டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யூ.எஸ்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பி.எஸ்., டி.ஆர்.பி. போன்ற தேர்வுகளுக்கு தன்னாவர் கல்விக் குழுக்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்பரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும். குறிப்பாக வகுப்புகள், மாதிரித் தேர்வுடன் அதையொட்டிய மாணவர்களின் சந்தேகங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் கலந்துரையாடல் வடிவத்தில் இருக்கும். தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும் திறமையான ஆசிரியர்களும் ஆலோசனைகளை வழங்குவர். அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். 


தற்போது, வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரரகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம்  TNPSC,TNUSRB,SSC,RRB,IBPS,TRB உள்ளிட்ட  பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.


இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருவதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, 38 மாவட்டங்களில் இயங்கும் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்  ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


http://bit.ly/facultyregistrationform -என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 


மேலும் இது குறித்து விவரங்களுக்கு 044-22501006 / 22501002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.01.2023




இதையும் படிங்க:


RCF Recruitment : ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்; மத்திய அரசு நிறுவனத்தில் பணி; எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ!


EDII Entrepreneurship Camp: நீங்களும் பிசினஸ் மேன் ஆகலாம்... அரசு தரும் சூப்பர் டிப்ஸ்.. விவரம்