தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நீதித்துறையில் சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இன்று முதல் இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்குகிறது.  தமிழக நீதித்துறையில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பதவிக்கான இடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, மொத்தம் 245 காலியடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரங்கள்


பதவியின் பெயர் - சிவில் நீதிபதி


காலி இடங்கள் - 245 


கல்வித்தகுதி


சிவில் நீதிபதி பதவிக்கு சட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 45 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு


ஏற்கனவே பணியில் உள்ள விண்ணப்பதாரர்கள் 25 முதல் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். SC/ST/MBC/BC வகுப்பினரை சேர்ந்தவர்களாக இருந்தால், அதிகபட்ச வயது 42 இருக்க வேண்டும்.


சட்ட பட்டதாரிகளாக இருந்தால் குறைந்தபட்சம் 22 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வயது வரம்பு இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் 27 இருக்க வேண்டும்.


ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:


விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்


தேர்வுக் கட்டண சலுகை: 


விண்ணப்பப்பதிவுக் கட்டணம் 150 ரூபாய், தேர்வுக்கட்டணம் 200 ரூபாய் ஆகும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், SC/ST பிரிவினர்களுக்குக் கட்டணம் இல்லை.


முக்கிய நாட்கள்



  • விண்ணப்பம் தொடக்கம் - 01.06.2023 (இன்று)

  • விண்ணப்பப்பதிவு முடியும் நாள் - 30.06.2023

  • முதன்மை தேர்வு - 19.08.2023

  • முதன்மை தேர்வு முடிவுகள் - 29.09.2023

  • நேர்முகத் தேர்வு - 28.10.2023 மற்றும் 29.10.2023


தேர்வு மையங்கள் : 


சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை, சேலம், வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 


எப்படி விண்ணப்பிப்பது?


https://www.tnpsc.gov.in/ http://www.tnpsc.gov.in/  - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.