குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - 11 பதவிக்கான (அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - 11 (TNPSC Assistant Public Prosecutor Grade II) நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் இன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அதே நேரத்தில் விண்ணப்பங்களில் திருத்தத்தை அக்.16 முதல் மேற்கொள்ளலாம். இதை அக்டோபர் 18ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மேற்கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வு முறை எப்படி?
* முதல்நிலைத் தேர்வு,
* முதன்மைத் தேர்வு,
* நேர்முகத் தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு எப்போது?
முதல்நிலைத் தேர்வு – டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடக்கும்.
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது முதன்மைத் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி வெளியிடப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதே நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒரு முறைப் பதிவு தளத்தில் (ஓடிஆர்) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும்.
தேர்வர்கள் ஏற்கனவே ஒருமுறைப் பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாகப் பூர்த்தி செய்யத் தொடங்கலாம்.
முழு விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/APP%20GRADE%20II%20TAMIL_.pdf