TNPSC Psychology Jobs :


தமிழ்நாடு மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் உடன்கலந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கான தகுதி விவரங்களை கீழே காணலாம்.


பணி விவரம்:


உளவியல் உதவிப் பேராசிர்யர் / மருத்துவ உளவியலாளர் 


மொத்தப் பணியிடங்கள்: 24


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர் உளவியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியல் பட்டம் அல்லது மருத்துவ உளவியலில் டிப்ளமோ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.




வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு குறித்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.




ஊதியம் விவரம்:‌ 


இந்தப் பணிக்கு ரூ.56,500 முதல்  ரூ.2,09,200 வரை மாத ஊதிய வழங்கப்படும்.


திருநங்கைகளின் வகுப்பு நிர்ணயம்.




தேர்வு செய்யப்பும் முறை:


கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
  இறுதி தெரிவானது விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விலும் வாய்மொழித் தேர்விலும் சேர்த்து பெற்ற மொத்த மதிப்பெண்கள் பணியிட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர் கணினி வழித் தேர்வின் அனைத்து பாடங்களிலும் வாய்மொழித் தேர்விலும் கலந்துகொள்வது கட்டாயமாகும். 


தேர்வுத்திட்டம்:






தேர்வுக் கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க பதிவுக் கட்டணம் - ரூ .150 செலுத்த வேண்டும். கணினி வழித் தேர்வுக் கட்டணம் - ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: 



  •  எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Danhbud) ஆகியன கட்டாயமாகும்.

  • விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150 ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு. பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் நடைமுறையில் இருக்கும்.

  • தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (OurTine Reghetration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • ஒருமுறைப்பதிவில் பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை CD/DVD/Pen drive போன்ற ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

  • ஒரு விண்ணப்பதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒருமுறைப் பதிவுக் கணக்கை (Cor TinRegietration BD) உருவாக்க அனுமதியில்லை.

  • விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய தனித்துவமான பதிவுக்கணக்கு மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஏற்கனவே பதிவிட்ட தங்களது விவரங்களை பார்வையிடவும்.,புதுப்பிக்கவும் செய்யலாம். தங்களது ஒருமுறைப் பதிவு கடவுசொல்லினை வேறு நபரிடமோ முகவர்களிடமோ பகிர்ந்து கொள்ள கூடாது.

  • ஒருமுறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம் அல்ல.

  • இது விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தன்விவரப் பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும்.

  • எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அறிவிக்கையில் "Apply-என்ற உள்ளீடு வழியே நிரந்தரப்பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் பெயரை தெரிவு செய்ய வேண்டும்.

  • புகைப்படம், குறிப்பிட்ட ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இல்லாமல் பதிவேற்றம் செய்யப்படும் இணையவழி விண்ணப்பம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு  நிராகரிக்கப்படும்.


தேர்வு நடைபெறும் நாட்கள்:




விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் : 14.12.2022 


இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதறகான காலம் - 19.12.2022 நள்ளிரவு 12.01. மணி முதல் 21.12.2022 இரவு 11.59 மணி வரை


அறிவிப்பு குறித்து முழு விவரத்திற்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/33_2022_AP_PSY_TAM.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.