தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் பதவிக்கான நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.
பணி விவரம்:
உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) - 54
உதவி சிறை அலுவலர் (பெண்கள்) - 5
மொத்த பணியிடங்கள் : 61
இந்தப் பணிகளுக்கு ஆண். பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி படிப்புகளில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்கள் நிரப்புவதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பத்தாம் வகுப்பு + பன்னிரண்டாம் வகுப்பு என்ற வரிசையில் கல்விப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 32 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,30, 4000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
எழுத்துத் தேர்வு - ரூ.100
தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்:
ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு மையங்கள் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோயில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in- ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.05.2023
விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் - 16.05.2023 12.01 AM - 18.05.2023 11.59 PM
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.tnpsc.gov.in/Document/english/09_23_Asst_Jailor_ENG.pdf-என்ற லிங்கை கிளிக் செய்யவும்.