ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரம்:


மேலாளர், துணைமேலாளர், செயல் அலுவலர், ஜூனியர் செயல் அலுவலர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 


மொத்த பணியிடங்கள் : 322


கல்வித் தகுதி: 


துணை மேலாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


இந்தப் பணிகளுக்கு துறை சார்ந்து அதற்கேற்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


சீனியர் கிரேட் மற்றும் அரசு விதிகளின் படி, மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான  ஆணையை பால்வளத் துறை ஆணையர் ந.சுப்பையன் வெளியிட்டார்.


கடந்த ஆட்சிக் காலத்தில், மாநிலத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டதாகவும், அதை தொடர்ந்து முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. 


இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்புகள் வரும். https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx என்ற இணைப்பை ஃபாலோ செய்யலாம்.


அறிவிப்பின் விவரம் - https://drive.google.com/file/d/1AIz-dzwkspSJmlKkxdeAZC1WJxWpYAKo/preview


 




மேலும் வாசிக்க. 


PWC Jobs: பி.டபள்யூ.சி நிறுவனம் அறிவித்த 30 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்.. இந்தியர்களுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்


Job Alert : 1,793 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!